செய்திகள் :

Seeman : `உடல் இச்சை ஏற்பட்டால்...' - பெரியாரை மேற்கோள்காட்டி சீமான் உண்டாக்கிய சர்ச்சை

post image
கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்திருந்தார். அப்போது, பெரியாரை மேற்கோள்காட்டி அவர் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகியிருக்கிறது.
சீமான்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம், டங்கஸ்டன் சுரங்க பிரச்சனை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு எனப் பலவற்றை பற்றியும் பேசிய சீமானிடம், 'விஜய் உண்மையாக நேசித்த ஒரே ஆள் நீங்கள்தான். இப்போது ஏன் முரண்பட்டிருக்கிறீர்கள்?' என ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சீமான், 'அண்ணன் தம்பி என்கிற பாச நேசமெல்லாம் வேறு. கொள்கைக் கோட்பாட்டு முரண் வேறு. பெரியாரை கொள்கை வழிகாட்டி என்கிறீர்கள், எனில் எந்த இடத்தில் அவர் உங்களுக்கு வழிகாட்டி என கேட்க வேண்டியிருக்கிறது அல்லவா? மொழியிலிருந்துதான் எல்லாமே பிறக்கிறது. இந்த மொழியை பேசுவதால்தான் நான் தமிழன். மொழிதான் எனக்கு கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல் என எல்லாவற்றையும் கொடுக்கிறது. அந்த மொழியையே சனியன், காட்டுமிராண்டி மொழி எனப் பேசியிருக்கிறார். உங்களின் தமிழன்னை உங்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தார் எனப் பெரியார் கேட்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம் எழுதியவருக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது யார்? மொழியையே இழிவாகப் பேசிய பிறகு என்ன சமூக சீர்திருத்தம் பேசுகிறீர்கள்?

திருக்குறளை மலம் என்கிறீர்கள். கம்பன் உங்களுக்கு எதிரி, திருவள்ளுவர் உங்களுக்கு எதிரி. அப்படிப்பட்டவரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி எனச் சொல்லுங்கள். பெண்ணிய உரிமையிலா? உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்றா தாயோ மகளோ அக்காவோ தங்கச்சியோ அவரோடு உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு எனச் சொன்னது பெண்ணிய உரிமையா?

சீமான்

மதுவுக்கு எதிராக தன் தோப்பிலிருந்த 1000 தென்னை மரங்களை வெட்டினார். பகுத்தறிவுவாதிதானே அவர்? என் தோட்டத்தில் கள் இறக்க அனுமதியில்லை எனச் சொல்லியிருக்கலாமே. அதற்காக யாராவது மரத்தை வெட்டுவார்களா? அதுதான் பகுத்தறிவா?' என பேசியிருந்தார்.

பெண்ணுரிமை சம்பந்தமான சீமானின் இந்தப் பேச்சு சர்ச்சையாகியிருக்கிறது. இந்நிலையில், 'நாளை காலை 10 மணிக்கு சீமானின் வீட்டுக்குச் செல்கிறேன். பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும்.' என தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ADMK இரட்டை இலை விவகாரம்: `தேர்தல் ஆணையம் முடிவெடுக்க இடைக்காலத் தடை' - உயர் நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திண்டுக்கல் சூரியமூா்த்தி என்பவர் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசா... மேலும் பார்க்க

Afghanistan: தாலிபான் அமைச்சருடன் இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு - பேசியது என்ன?

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லானி அமிர் கான் முத்தாகியை சந்தித்துள்ளார். துபாயில் நடந்த இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய வளர்ச... மேலும் பார்க்க

மதுரை: முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்த பாஜக நிர்வாகி; காரணம் என்ன?

முதல்வர் படத்துடன் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பா.ஜ.க நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக நிர்வாகிகள்மனு அளிக்க வந்த மதுரை மாவட்ட பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் சரவணன் செய்தியாளர்களிடம்... மேலும் பார்க்க

'மீண்டும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை...' - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்; டெல்லிக்குப் பறந்த புகார்

மீண்டும் தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார் என்ற வாசகத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலைமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தும் பா.... மேலும் பார்க்க

"காவல் துறையின் அராஜக நடவடிக்கை கண்டனத்திற்குரியது.." - சு.வெங்கடேசன் கோபத்தின் காரணம் என்ன?

"டங்ஸ்டன் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளரை குறிவைத்து காவல்துறை இழுத்துச் சென்றது ஏன்? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மதுரை நாடாளும... மேலும் பார்க்க

”திமுக அரசை அதன் கூட்டணிக் கட்சிகள் மயிலிறகால் மென்மையாக எதிர்க்கின்றன” - செம்மலை காட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு, தி.மு.கமேயர்சண்.இராமநாதன் செய்கின்ற முறைகேடுகள் உள்ளிட்டவற்றைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தபால் நிலையம் எதிரே கண்ட ஆர்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க