ரெட் கார்டு பெற்ற வினிசியஸ் ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதியில் பங்கேற்பாரா?
ரியல் மாட்ரிட் அணி வீரர் வினிசியஸ் ஜூனியர் ஸ்பான்ஷ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பங்கேற்பாரென தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதியில் பார்சிலோனா - அத்லெடிக் பில்பாவ் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா 2-0 என வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது.
மற்றுமொரு அரையிறுதியில் ரியல் மாட்ரிட் அணியுடன் மல்லோர்கா அணி மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி ஜன.10ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் வினிசியஸ் ஜூனியர் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த போட்டியில் வலேன்சியா கோல் கீப்பரை ஆக்ரோஷமாக கீழே தள்ளிவிட்டதால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
வழக்கமாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டால் 4-12 போட்டிகளில் இடைநீக்கம் அல்லது 2 லீக் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். இதன் அர்த்தம் முக்கியப் போட்டிகளில் விளையாடலாம். அதனால் வினிசியஸ் ஜூனியர் நிச்சயமாக அரையிறுதியில் விளையாடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி மொத்த அணியும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
கிளியன் எம்பாப்பே, ஜூட் பெல்லிங்ஹாம், ரோட்ரிகோ ஆகிய அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பதாக கூறியுள்ளார்.
13 முறை ரியல் மாட்ரிட் அணி ஸ்பானிஷ் சூப்பர் கோப்பையை வென்றுள்ளது. நடப்பு சாம்பியனும் ரியல் மாட்ரிட் என்பது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதில் மல்லோர்கா உடன் வென்றால் இறுதிப் போட்டியில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் மோதும் எல் கிளாசிக்கோ போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
தங்கப் பந்து விருது இந்தமுறை மான்செஸ்டர் சிட்டி அணியின் மிட் ஃபீல்டர் ரோட்ரி இந்தாண்டுக்கான பேலன் தோர் விருதினை (தங்கப் பந்து) வென்றார்.
இந்த விருது வினிசியஸ் ஜூனியருக்கு நிறவெறி காரணமாக மறுக்கப்பட்டதாக ரியல் மாட்ரிட் அணியினர் விழாவினை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.