ஹிந்தி பிக் பாஸ்: 94 நாள்களில் வெளியேறிய ஸ்ருதிகா!
குறைவான வாக்குகளைப் பெற்றதாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தமிழ் நடிகை ஸ்ருதிகா வெளியேற்றப்பட்டார். அவர் மொத்தம் 94 நாள்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார்.
ஹிந்தியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில் தமிழ் நடிகை ஸ்ருதிகா பங்கேற்றார். ஹிந்தி நடிகர், நடிகைகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து போட்டியாளராக ஸ்ருதிகா களமிறங்கினார்.
இதனால் ஆரம்பம் முதலே தமிழக ரசிகர்களிடமும் ஹிந்தி பிக் பாஸ் ரசிகர்களிடமும் கவனத்தைப் பெற்றார். பின்னர் பிக் பாஸ் போட்டிகளில் நேர்மறையாக பங்கேற்றதிலும் வெள்ளந்தியாக அனைவரிடமும் பழங்குவதிலும் பலரைக் கவர்ந்தார்.
ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரும் பக்குவப்பட்ட மனிதர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள முயன்றபோது, குழந்தைதனமான பேச்சால் சக போட்டியாளர்களின் நன்மதிப்பையும் ஸ்ருதிகா பெற்றார்.
பிக் பாஸ் 18 நிகழ்ச்சி 13 வாரங்களைக் கடந்த நிலையில், வாரத்தின் மத்தியில் ஒரு போட்டியாளரை வெளியேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஹிந்தியில் பலரும் அறிந்த சசாத் பாண்டே, ரஜாத் தலால் ஆகியோருடன் ஸ்ருதிகாவும் நாமினேஷனில் இருந்தார்.
மூவரில் குறைந்த வாக்குகளைப் பெறும் நபர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவர். அந்தவகையில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக நடிகை ஸ்ருதிகா வெளியேற்றப்பட்டார்.
மக்கள் மனங்களைக் கவர்ந்த ஸ்ருதிகா வெளியேற்றப்பட்டது நியாயமற்றது என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் டாப் 5 போட்டியாளர்கள்! விசித்ரா வெளியிட்ட பட்டியல்