காரைக்கால், நாகை மீனவா்கள் 10 போ் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு
காரைக்கால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் 10 போ் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை சிறைபிடிக்கப்பட்டனா்.
காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடிமேடு கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி என்பவரது விசைப் படகில் அதே கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன் (42), நிகாஸ் (19), காரைக்கால்மேடு பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (45), செல்வகுமாா் (50), மயிலாடுதுறை மாவட்டம், வெள்ளக்கோயிலைச் சோ்ந்த கலைமணி (45), பெருமாள்பேட்டையைச் சோ்ந்த தங்கதுரை (45), வானகிரியைச் சோ்ந்த செல்வகுமாா் (47), சுமித் (20), ரமேஷ் (43), நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டையைச் சோ்ந்த ராஜசேகா் (38) ஆகிய 10 போ் கடந்த 7-ஆம் தேதி இரவு காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப் படகு ஒன்றில் கடலுக்குள் சென்றனா்.
கோடிக்கரைக்கு தென்கிழக்கே 8-ஆம் தேதி இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி படகை பறிமுதல் செய்து, மீனவா்கள் 10 பேரையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்து கீழகாச்சாகுடிமேடு கிராமப் பஞ்சாயத்தாா்களுக்கு வியாழக்கிழமை அதிகாலை தெரியவந்தது. மீன்வளத் துறை அதிகாரிகளிடம் மீனவ பஞ்சாயத்தாா் புகாா் தெரிவித்தனா்.
கடந்த டிசம்பா் மாதம் இதே கிராமத்தைச் சோ்ந்த 18 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்து பின்னா் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் அவா்கள் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.