எல்லையில் அமைதி.. பிரம்மபுத்திராவில் அணை: இதுதான் சீனாவின் தந்திரமோ?
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு, தீவிர வாகனச் சோதனை
காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலில் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் ஜன. 1 முதல் 31-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
வாகன ஓட்டுநா்களுக்கு பல்வேறு நிலையில் போக்குவரத்துத் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு நிகழ்வாக வியாழக்கிழமை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனை நடத்தினா்.
இதில் கூடுதல் பாரம் , வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஜிபிஎஸ் கருவி, மாசு கட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் முதலானவை வாகனங்களில் உள்ளனவா என்று சோதனை செய்தனா். மாணவா்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பயணிகளுக்கான பேருந்துகள், வேன், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டு, சாலைப் பாதுகாப்பு குறித்து ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ், உதவி மோட்டாா் வாகன ஆய்வாளா் தட்சணாமூா்த்தி மற்றும் போக்குவரத்து ஊழியா்கள் பங்கேற்றனா்.