செய்திகள் :

கௌதம் கம்பீர் சுயநலமற்றவர்..!ஆதரவாக பேசிய ஹர்ஷித் ராணா!

post image

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு ஆதரவாக ஹர்ஷித் ராணா பேசியுள்ளார்.

கம்பீர் தலைமையில் பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 1-3 என மோசமாக தோல்வியுற்றது. சொந்த மண்ணில் இந்தியா 0-3 என நியூசிலாந்திடம் படுதோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் மூத்த வீரர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவதற்கு கௌதம் கம்பீர் சரியான தேர்வல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், “தனியாளாக ஒட்டுமொத்த அணியின் உழைப்புக்கான பெயரை பிஆர் மூலமாக கம்பீர் பெற்றார்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.

தற்போது இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா கம்பீருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹர்சித் ராணா கூறியதாவது:

தனிப்பட்ட பாதுக்காப்பின்மையினால் ஒருவரை விமர்சிப்பது நல்லதல்ல. கௌதம் கம்பீர் தன்னைவிட மற்றவர்களின் நலனை நினைப்பவர்களில் ஒருவர்.

ஒருவரின் மோசமான நாள்களில் வீரர்களை நம்புகிறவராகவும் வீரர்களை புகழ் வெளிச்சத்தில் நிறுத்துபவராகவும் இருப்பவர் கம்பீர். அதை அவர் பலமுறை செய்திருக்கிறார். ஆட்டத்தை எங்கள் பக்கம் எப்படி திருப்புவது என்ற அறிவுடையவர் கம்பீர் எனக் கூறியுள்ளார்.

கம்பீருக்கு ஆதரவாக பதிவிட்ட ஹர்சித் ராணா.

கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிம் இக்பால், அலெக்ஸ் ஹேல்ஸ்! என்ன பிரச்னை?

பிபிஎல் தொடரில் அலெக்ஸ் ஹேல்ஸ், தமிம் இக்பாலுக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது. போட்டி முடிந்து கை குழுக்க சென்றபோது தமிம் இக்பால் தன்னை தனிப்பட்ட விதத்தில் பேசியதாக குற்றம்சாட்டி வாக... மேலும் பார்க்க

ஓய்வை அறிவித்தார் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.விஜய் ஹசாரே தொடரில் விளையாடிவந்த இந்திய கிரிக்கெட... மேலும் பார்க்க

50 ஆண்டுகளை நிறைவு செய்த வான்கடே மைதானம்!

வான்கடே கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாட முடிவு செய்துள்ளது.மும்பை வான்கடே மைதானம் கடந்த 1974 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த மைதானம் அமைக்கப... மேலும் பார்க்க

விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி: கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க முடிவா?

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி நிலவும் நிலையில், முன்னணி விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலுக்கு இங்கிலாந்து தொடரில் ஓய்வளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாகிஸ்தானில் நட... மேலும் பார்க்க

உலகத்திலேயே ரிஷப் பந்த் ஒரு சிறந்த டிஃபென்டர்! அஸ்வின் புகழாரம்!

இந்தியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் ரிஷப் பந்த்திடம் நல்ல டிஃபென்ஸ் (தடுத்து ஆடும்) செய்யும் திறமை இருக்கிறதெனப் புகழ்ந்து பேசியுள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் ரிஷப் பந்த் பலமு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; மருத்துவர்கள் கூறுவதென்ன?

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சைம் ஆயூப் அடுத்த 6 வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளை... மேலும் பார்க்க