ஜம்மு-காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள், வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் கடந்த 3 நாள்காக பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஐந்து கையெறி குண்டுகள், ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மின்மதி 2.0 செயலி: துணை முதல்வர் உதயநிதி தொடக்கி வைத்தார்!
வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் க்ரால்போரா பகுதியில் உள்ள டீபீ வனப்பகுதியில் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஜம்மு காஷ்மீரில் கடந்த 2024 ஆண்டு மொத்தம் 75 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.