அவதூறு வழக்கில் ராகுலுக்கு புணே நீதிமன்றம் ஜாமீன்
சாவர்க்கர் குறித்த அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகு காந்திக்கு புணே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு புணே சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது ராகுல் காந்தி காணொளி மூலம் ஆஜரானார். அப்போது அவருக்கு ரூ.25,000 உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
ராகுல் காந்தியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிலிந்த் பவார், ராகுல் காந்தி ஆஜராவதில் இருந்து நீதிமன்றம் நிரந்தர விலக்கு அளித்துள்ளது என்று கூறினார்.
வயதான தம்பதியை பிணையக் கைதிகளாக பிடித்து கொள்ளை! 3 பேர் கைது!
இந்த வழக்கு பிப்ரவரி 18 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த 2023ல் லண்டனில் பேசிய ராகுல் காந்தி வி.டி. சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது புணே நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
பின்னர் இந்த வழக்கு எம்.பி., மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.