செய்திகள் :

'StartUp' சாகசம் 6 : `ஊட்டச்சத்து பானம் டு லட்டு..!’ - பனங்கிழங்கும் விமலாம்பிகையும்

post image

தமிழ்நாட்டின் மாநில மரம் பனைதான். ஒரு பனையிலிருந்து ஓராண்டில் 150 லிட்டர் பதநீர்,  24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் என ஒரு தோராயமான கணக்கு நம்மிடையே வழக்கத்தில் உள்ளது. பனையை பற்றிய பெரிய கட்டுரையை நாம் இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். இங்கே நாம் பார்க்கவிருப்பது பனங்கிழங்கு மால்ட்தான்.

பனைக்கிழங்கு பற்றி நம்மிடையே சங்க இலக்கியங்களிலேயே குறிப்புகள் உள்ளன.

``நாராய் நாராய் செங்கால் நாராய்

பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாரா” 

என்று நாரையின் அலகிற்கு பனை கிழங்கை உவமையாய் கூறியுள்ளனர் எனும்போது, அக்காலத்திலேயே பனங்கிழங்கு நம்மிடையே பயன்பாட்டில் இருந்ததைக் குறிக்கிறது. 

பனங்கிழங்கு

இக்காலத்தில் பனைக்கிழங்கை நாம் வெறும் கிழங்காகத்தான் சாப்பிடுகிறோம்.

ஆனால் பனங்கிழங்கில் இருந்து நிறைய உணவுப்பொருட்களை நம்மிடையே உருவாக்க முடியும். இலங்கையின்  முக்கிய  உணவுப் பொருட்களில்  ஒடியன் என்பது  பனங்கிழங்கை  வெயிலில் காயவைத்து சிறு சிறு துண்டுகளாக கிடைக்கும்  உலர்ந்த  கிழங்கு ஒடியல். இந்த ஒடியலை  நீண்ட காலம் வைத்துப் பயன்படுத்த முடியும். பொதுவாக  ஒடியலை  இடித்து மாவாக்கி அதிலிருந்து பலவகையான உணவுப் பொருட்களைச்  செய்து  உண்கிறார்கள். அதிலிருந்து உருவாக்கப்படும்  ஒடியல் பிட்டு, ஒடியற்கூழ்,  ஒடியல் லட்டு இவையெல்லாம்  இவை  இலங்கை  தமிழர்களிடையே  பிரதான உணவு.

ஆனால் தமிழ்நாட்டில் நமக்கெல்லாம் இன்னமும் கிழங்குதான். அப்படி சாப்பிட்டால்தான் நமக்கெல்லாம் மகிழ்வு. உண்மையில் பனம்கிழங்கை வைத்து நிறைய தின்பண்டங்களை  உருவாக்கலாம்.

அப்படி உருவாக்கி அதை தமிழ்நாட்டில் தொடர்ந்து பயன்படுத்தி அதன் ஊட்டச்சத்தை மையப்படுத்தி சுய தொழில் புரியும் VLSI யில் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்து இன்று தொழில்முனைவோராய் வலம் வரும் விமலாம்பிகை யைத்தான் இன்று நாம் காணவிருக்கிறோம்.

ME (VLSI) படிப்பு படித்துவிட்டு VLSI சார்ந்த துறையில் பணியாற்றிவிட்டு கொரோனாவுக்குப் பிறகு தனது சொந்த ஊரான திருச்செங்கோட்டிலிருந்து `விமலி என்டர்பிரைசஸ்' என் நிறுவனத்தின் வழியே பனங்கிழங்கு பொடி, பனங்கிழங்கு மால்ட், பனங்கிழங்கு லட்டு, பனங்கிழங்கு ஊட்டச்சத்து பானம் என கலக்கி வரும் விமலாம்பிகையை சந்தித்தோம்

விமலாம்பிகை
``பனம் கிழங்கு மால்ட் செய்யலாம் என்று எப்போது தோன்றியது? ஏனெனில் எல்லாரும் மசாலா பொடியை நோக்கி போதும்போது நீங்கள் மட்டும் எவ்வாறு பனங்கிழங்கை தேர்ந்தெடுத்தீர்கள்?"

``கொரோனாவுக்குப் பிறகு  எனக்கும் குடும்பத்தின் மீதும் குழந்தைகளின் ஆரோக்கியத்தின்மீதும் கவனம் செலுத்தனும் தோணுச்சு. அப்ப அது சம்பந்தமா நிறைய தேடும்போது நம்ம பக்கத்து நாட்டில்  போர்க்காலங்களில் உணவு பொருட்கள் கிடைக்காத நேரத்திலயும் வருடம்முழுக்க ஒடியன் கிடைச்சது என்பதை படித்தபோது பனங்கிழங்கின் மகத்துவம் புரிஞ்சது. அது சம்பந்தமா தேடி தேடி படிச்சபோது பனங்கிழங்கை நாம ஏன் அதை முயற்சிக்க கூடாது என்று யோசித்தோம். அதுவும் இல்லாம எங்க ஊர் பக்கம் நிறைய கிடைச்சது. ஆனா எல்லாரும் கிழங்காதான் சாப்பிடறாங்க. சரி வித்தியாசமா முயற்சிப்போம்னு தொடர்ந்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அது  ஒரு உன்னதமான உணவு , அவ்வளவு ஆரோக்கியமானது என்று தெரிஞ்சது. இன்னொருப் பக்கம் எல்லாரும் சமையல் பொடியில் பிசியாக இருந்தனர். சமையலை எளிமையாகவும், ருசியாகவும் இருக்கணும்னு என்னுடைய தேடல் இருந்தது. அந்தத் தேடல் பட்டியலில் முதலில் வந்ததுதான் பனங்கிழங்கு.

அதை பொடியாக்கி இருந்தாலும் அது ருசியா இல்லை. அதில் கொஞ்சம் காரல் வந்தது. அந்த தன்மை மாறாததுனால அதை  மக்களால் எடுத்துக்க முடியல. அப்போ அது சம்பந்தமான இன்னமும் தேடினோம். அப்பத்தான் பனங்கிழங்கு பொடியோட தானியங்களும் சுக்கு மிளகாய்  ஏலக்காய் கொஞ்சம் சேர்த்து சந்தையில் அறிமுகம் செய்தோம். இதில் முக்கியமான விசயம் தானியங்கள் அளவு ரொம்பக்குறைவுதான். அதனால பனங்கிழங்கு ஊட்டச்சத்து மாறாத மாதிரி செய்ய முயற்சித்து கடைசியில் அதுக்கான வழியை கண்டறிந்தோம்.

இப்ப எங்க விமலி பனங்கிழங்கு பொடி, பனங்கிழங்கு மால்ட் இரண்டுத்துலயும் இருக்கு. எளிமையான  ருசியான சமையல் கோட்பாட்டில் கொண்டு வந்துட்டோம். இப்படித்தான் ME படிச்ச நான் பனங்கிழங்க வைத்து தொழில்முனைவோரா வந்தேன்.”

``பனம் கிழங்கு மால்ட் எவ்வாறு பெற்று உற்பத்தி செயல்முறை குறித்து விவரிக்கவும், தரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை உறுதிப்படுத்துவது எப்படி?”

``நீங்க நல்லா பார்த்திங்கன்னா  பனைமரத்திற்கு யாரும் உரம் போடறதில்ல, அதுக்கான தேவையும் இல்ல. அதே மாதிரி அதிலிருந்து உருவாகும் பொருளை நீண்ட நாள் பார்த்து வைக்க எந்த  கெமிகக்கலும் சேர்க்கவேண்டிய தேவையும் இல்ல, அது அதனால அது ஒரு கற்பக மரம்னு எல்லாருமே சொல்லறோம். கிழங்கை வாங்கி வேக வைச்சி சின்ன சின்னதா வெட்டி வைத்தாலே போதுமானது. வருடம் முழுக்க நம்மால வைச்சுக்க முடியும். அப்பப்போ வெயிலில் காய வைக்கலாம். 

ஆனால் இதுக்கு பின்னாடிதான் எங்களோட பெரிய வேலையே இருக்கு . இதை சூரிய வெயிலில்தான் காய வைக்கிறோம். சோலார் டிரையர் திட்டமிருக்கு . ஆனா இப்போ இல்லை. வெயிலில் காய வைக்கும்போது  கூட  நாங்க வெள்ளைத்துணியால் சேர்த்துதான் காய வைப்போம். ஏன்னா அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் விரயமாயிடக்கூடாது என்பது ரொம்ப முக்கியம். அதன் பின்னர் இன்னொரு நல்ல விசயம்  பனங்கிழங்கை பொடியாக்க நாங்களே சொந்தமா மில் வைச்சிட்டோம். அதனால எங்களால அந்த தரமான பனங்கிழங்கு போடி செய்ய முடியுது. அதனால எல்லா செயல்பாடுகளையும்  இப்படி நாங்க  பார்த்து பார்த்து பண்றதுனால 100% தரமா கொடுக்கமுடியுது.”

``பனம் கிழங்கு மால்ட் முக்கிய ஊட்டச்சத்து நன்மைகள் என்ன, மேலும் இந்த தகவல்களை எவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கிறீர்கள்?”

``சிலர் எந்தவித ஆய்வும் செய்யாமல் பனங்கிழங்கை வைத்து விற்கும்போது நாங்கள் முறையா  ஊட்டச்சத்து ஆய்வு எல்லாம் செய்து, அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை கண்டறிந்து இருக்கிறோம். அதுவும் பனைகிழங்கு பொடிக்கு தனியா ஒரு ஊட்டச்சத்து ஆய்வு ஆறிக்கை, பனங்கிழங்கு மால்ட்டுக்கு தனியா ஒரு ஊட்டச்சத்து அறிக்கை, ஏன்னா பனங்கிழங்கு மால்ட்டில்  10 வகையான பொருள் சேர்க்கிறோம். அதனால பனங்கிழங்கு மால்டின் எந்தக் குணமும் மாறிடக்கூடாது  என்பதும் எங்கள் கவனமா இருந்துச்சு. அதனால முறைப்படி ஆய்வையும் செய்து வைச்சிருக்கிறேன்.  எங்களால முடிஞ்ச அளவு உண்மையை மட்டும் சொல்லிதான் பொருள் விக்கறோம். நாங்க பார்த்தது இரும்புச்சத்தும் நார்சத்தும் அதிகம். மாவுச்சத்தும் அதிகம், அதனால நாங்க இது சாப்பிட இரத்த சர்க்கரை குறையும் என சொல்வதில்லை. ஆனால் சாப்பிடப் பலபேர் சர்க்கரை குறையிறதா சொல்லியிருக்காங்க. இதில் முறைப்படி ஆய்வு செய்யணும். செய்வோம்!

நாங்க ஊட்டச்சத்து விபரத்தை  எங்களோட பொருளோட பின்னாடி  ஸ்டிக்கர்லை  பிரிண்ட் பண்ணி இருக்கோம் , அதை வைத்து உங்களால அத பாத்துக்க முடியும். எவ்ளோ பைபர் , கால்சியம், இரும்புச்சத்து, கால்சியம்  பனங்கிழங்குலதான் இருக்கு. நாங்களும் ஆய்வு செய்திட்டு இருக்கோம். எம்இ படிச்சுட்டு எந்த ஆய்வையும் செய்யாம சும்மா உடான்ஸ் விடுவதில் எனக்கு விருப்பம் இல்லை.”

``பனம் கிழங்கு மால்ட் சந்தையில் நீங்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ன, மேலும் உங்கள் நிறுவனம் அவற்றை எவ்வாறு சமாளிக்க திட்டமிடுகிறது?”

``நிலையான ஒரு வருமானம் வந்துகொண்டு இருந்த ஒரு நிலைமையில இருந்து வருமானமே கேள்வி குறியா, உங்களுடைய உழைப்புக்குத் தகுந்த ஊதியம் இன்னும் வரவில்லை என்கிற நிலையில் தான் இருக்கு. உழைப்பு போட்டுட்டே இருக்கிறோம். எப்போவுமே நம்முடைய சமூகம் எதுவாக இருந்தாலும் வருமானம் வந்தால்தான் அதற்கு உண்டான மரியாதையை தரும்.

M.E. படிச்சுட்டு அப்படி ஒரு நல்ல வேலையில இருந்துட்டு வந்து இவ்வளவு கஷ்டப்படணும் அப்படிங்கறது உனக்கு தேவையா?  என்ற கேள்வியும் குடும்பத்தில் எழுந்துட்டுதான் இருக்கு. ஏனென்ன பிஸிக்கலா வந்து ஆட்கள் கிடைக்குறதே இல்ல. பல நாட்கள் நானே வந்து எல்லா  வேலையையும்  செய்யற  மாதிரி இருக்கும் , கொஞ்சம் கடினம்தான்.  ஆனால்  குறிப்பிட்ட  அளவு சந்தையை  பிடிச்சிட்டால்  எல்லாம்  மாறும்  என்ற  நம்பிக்கையில்  இருக்கேன். நிறைய  பேருக்கு பனங்கிழங்கு பற்றி  தெரியல, . அதுக்கான  விழிப்புணர்வு செய்யவும்,  சோசியல் மீடியால இனி கொஞ்சம் திட்டமிட்டு சில செயல்களை கொண்டு வர உள்ளோம்.


இந்த நேரத்தில் எங்களை மேம்படுத்த எங்களக்கு வீ மகளிர் அமைப்பு (Women Empowerment & Enterprenuyreship ) நிறைய உதவியது. 21 நாள் தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பெடுப்பாங்க அது  எனக்கு ரொம்ப உதவியது”

`விமலி என்டர்பிரைசஸ் உள்ளுர் விவசாயிகளுக்கு எப்படி உதவும்?’

``உள்ளூர் விவசாயிகள்  பார்த்தீங்கன்னா  நிறைய  பேர்  சொல்றது, `எங்க ஊர்ல நாங்களே எதுவும்  பண்ணலனாலும்  பனைமரத்துல இருந்து அதுவா  விழுந்திடும். அந்த பனம் நுங்கு சீசன்  முடிஞ்சு அந்த  பழத்தை விட்டுவிடுவதால்  அந்த  சீசன்  முடிஞ்சதுக்கு  அப்புறம்  பார்த்தீங்கன்னா  அது பழமா  மாறி அதுக்கு  அப்புறம்  கீழ விழுந்துரும். சோ, அந்தக்கொட்டை தானாக முளைத்துவிடும்.  இதுவும்  ஏறக்குறைய  90 நாள் வர்த்தகம். முதலீடு இல்லாமல்  வணிகம்  செய்ய முடியும்.

இப்ப பனங்கிழங்கு வச்சு நம்ம ஒன்னு  பண்ண  முடியும்னா  நம்ம  ஏன்  அந்த பனை விதைகளை  எடுத்துட்டு  வந்து  நம்மளே  நம்மளோட  நிலத்துல போட்டு, அதிலிருந்து   ஒரு பொருள  உருவாக்கி  விற்க கூடாது. ஒரு நல்லவிலை வித்துச்சுன்னா அத வச்சு கண்டிப்பா உங்களோட வாழ்வாதாரமும் உயரும், விவசாயிக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும். ஏன்னா பனங்கிழங்கு பொறுத்த வரைக்கும் உங்களுக்கு எந்த இன்வெஸ்ட்மென்ட்டுமே கிடையாது. ஊர்ப்பக்கம் போனால்  ஒரு நூறு பனைமரம் இருக்கும்.  விழுற அந்த  பனை  விதைகளை  மட்டும் சேகரிச்சிட்டு வந்தாங்கனா போதும். அதை முளைக்க வைக்க  நீங்க எந்த விதமான மருந்தும் அடிக்கத்தேவையில்லை  கொட்டைகளை விதைய வெச்சி போட்டு வச்சிட்டீங்கன்னா  ரெகுலரா  கொஞ்சம் நாள் தண்ணி ஊத்தினால் போதும் 18  நாளில் முளைத்துவிடும்  இன்வெஸ்ட்மென்ட்  இல்லாத ஒரு பிசினஸ் இது”

``விமலி எண்டர்பிரசைஸ் எதிர்காலத்திட்டம் என்ன ?”

பனங்கிழங்கு மாவு: பேக்கிங், சிற்றுண்டி தயாரித்தல் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்ப்பதற்கு பயன்படுத்தவது மாதிரியும், பனங்கிழங்கு புட்டு செய்யவும் திட்டமிருக்கு

பனங்கிழங்கு சிப்ஸ்: உருளைக்கிழங்குசிப்ஸுக்குஆரோக்கியமானமற்றும்சுவையானமாற்றுசெய்யஒருஆய்வுதிட்டமிருக்கு.” என்கிறார்.

நல்ல ஆரோகியமான உணவை தரமாக வழங்க நினைக்கும் விமலாம்பிகைக்கும் அவரின் முயற்சிக்கும் வாழ்த்துகளை சொல்லி நகர்ந்தோம்!

(புதிய முயற்சிகள் தொடரும்...!)

GRT: பொங்கலை பொன் பொங்கலாகக் கொண்டாடுவோம் - சிறப்பு சலுகைகளை அறிமுகம் செய்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

1964ஆம் ஆண்டிலிருந்து, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நகைத் துறையில் சிறந்து விளங்கும் அடையாளமாக திகழ்கிறது. தற்போது தனது 60வது ஆண்டைக் கொண்டாடும் இந்த நிறுவனம், தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக... மேலும் பார்க்க

`நான் பணக்காரர்; அடுத்தென்ன செய்வதென தெரியவில்லை' - $975 மில்லியன் நிறுவனத்தை விற்ற இந்திய வம்சாவளி!

வினய் ஹிரேமத் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் 975 மில்லியன் அமெரிக்க டாலருக்கு தனது நிறுவனத்தை விற்ற பிறகு ‘வாழ்கையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இவர... மேலும் பார்க்க

பிசினஸ் கருத்தரங்கில் விகடன் 'லாபம்' ஸ்டால்! ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு அரிய வாய்ப்பு! அனைவரும் வருக

இளம் தொழில்முனைவோர்க்கான வழிகாட்டி அமைப்பான 'யெங் ஆன்ட்ரபிரினர் ஸ்கூல்' (YOUNG ENTREPRENEUR SCHOOL - YES), சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டரில் வருகிற4 , 5 (சனி மற்றும் ஞாயிறு) அன்று ... மேலும் பார்க்க

RamRaj: ஜனவரி 1 முதல் 7 வரை! - ராம்ராஜ் நடத்தும் வேட்டி வார கொண்டாட்டம்

இன்றைய இளைய தலைமுறையினருக்கும் பாரம்பரியத்தில் ஆர்வம் ஏற்படுத்தி, அவர்களது மனதில் அது ஆழப்பதிந்து, தொடர்ந்து அவர்கள் ஈடுபாட்டுடன் வேட்டி என்ற இந்திய கலாச்சார உடையின் மகத்துவம் அவர்கள் வாழ்வில் ஒரு பகு... மேலும் பார்க்க

GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம், நீண்ட காலமாகச் சிறப்பிற்கும் மற்றும் கைவினைத் திறமைக்குமான அடையாளமாக விளங்குகிறது.இந்நிறுவனத்தின் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் அளிக்கும் உறுத... மேலும் பார்க்க

Adani: 'ஒரு வாரமாக சரிந்த அதானி குழும பங்குகள்... இன்று ஏறுமுகம்' - காரணம் என்ன?!

அதானி மீதான அமெரிக்காவின் மோசடி குற்றசாட்டால் அதானி குழுமம் முதல் அதன் பங்குகள் வரை ஆட்டம் கண்டாலும், தற்போது மீண்டும் அது ஏறுமுகத்தில் நகர தொடங்கியிருக்கிறது. மேலே சொன்னதற்கு உதாரணமாக, நேற்றைய அதானி ... மேலும் பார்க்க