பிசினஸ் கருத்தரங்கில் விகடன் 'லாபம்' ஸ்டால்! ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு அரிய வாய்ப்பு! அனைவரும் வருக
இளம் தொழில்முனைவோர்க்கான வழிகாட்டி அமைப்பான 'யெங் ஆன்ட்ரபிரினர் ஸ்கூல்' (YOUNG ENTREPRENEUR SCHOOL - YES), சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டரில் வருகிற 4 , 5 (சனி மற்றும் ஞாயிறு) அன்று 'யெஸ்கான்' (YESCON) என்கிற கருத்தரங்கை நடத்தவிருக்கிறது. தமிழகத்தின் முன்னணித் தொழிலதிபர்கள் பலரும், தமிழகம் முழுக்க உள்ள 5,000 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்களும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்தக் கருத்தரங்கு வளாகத்துக்கு அருகில் வர்த்தகக் கண்காட்சி நடக்கிறது. இந்தக் கண்காட்சியில் விகடன் வெல்த் நிறுவனத்தின் 'லாபம்' தனி ஸ்டால் அமைத்திருக்கிறது. விகடன் 'லாபம்' அமைந்திருக்கும் ஸ்டால் எண்: 86.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு ஆலோசனை பெற விரும்புகிறவர்கள் என முதலீட்டாளர்கள் அனைவரும் எண் 86-ல் அமைந்துள்ள 'லாபம்' ஸ்டாலுக்கு வந்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்! சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த வர்த்தகக் கண்காட்சி நடக்க இருக்கிறது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்! பலரும் இதில் முதலீடு செய்யத் துடிக்கும் நிலையில், இந்தக் கண்காட்சியில் 'லாபம்' ஸ்டாலுக்கு வந்து மியூச்சுவல் ஃபண்ட் பற்றி மேலும் தெரிந்துகொண்டு பயன் பெறலாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை! விகடன் 'லாபம்' ஸ்டாலுக்கு அவசியம் அனைவரும் வரலாமே!