செய்திகள் :

Mysore Sandal Soap: வரலாறு காணாத வருமானம்; ரூ.108 கோடியை அரசுக்கு ஈவுத்தொகையாக வழங்கி அசத்தல்!

post image

மைசூர் சாண்டல் சோப் என்ற பிரபல சோப் கர்நாடகா அரசின் பொதுத்துறை நிறுவன தயாரிப்பாகும். சந்தன மண் என்றழைக்கப்படும் கர்நாடகாவின் பல பகுதிகளில் இன்றளவும் சந்தன மரங்கள் செழித்தோங்குகின்றன. திரவ தங்கமாகக் கருதப்படும் தூய சந்தன எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மைசூர் சாண்டல் சோப் வரலாற்று பாரம்பர்யம் கொண்ட தயாரிப்பாக விளங்குகிறது.

மைசூர் சாண்டல் சோப் நிறுவனம்

கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடெர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த அரசு நிறுவனம் மைசூர் சாண்டல் சோப் மட்டுமின்றி பல்வேறு தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது.

2023- 2024 நிதியாண்டில் இந்த நிறுவனம் ரூ. 362.07 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இதில் 30 சதவிகித பங்கான ரூ.108 கோடியை ஈவுத்தொகையாக கர்நாடகா மாநில அரசுக்கு வாரிக் கொடுத்திருக்கிறது.

மேலும் முதலமைச்சரின் நிவாரண நிதியாக ரூ. 5 கோடியை இந்த நிறுவனம் வழங்கியிருக்கிறது. கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடெர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவன வரலாற்றில் இதுவே அதிகபட்ச லாபமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து தெரிவித்துள்ள கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, "இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 15.91 கோடி ரூபாயை ஈவுத்தொகையாக வழங்கியது. தற்போது அது 108 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது .

மைசூர் சாண்டல் சோப் நிறுவனம்

இதுவே இந்த நிறுவனத்தின் அதிகபட்ச வருமானமாகும். கே.எஸ்.டி.எல் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது .‌ இந்த நிறுவனம் இந்திய சந்தை மட்டுமன்றி சர்வதேச சந்தையிலும் கால் பதித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

GRT: உலகின் அதிக எடை கொண்ட தங்க காதணி; கின்னஸ் சாதனை படைத்த ஜி. ஆர்.டி ஜூவல்லர்ஸ்

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் படைத்துள்ளது, மீண்டும் ஒரு உலக சாதனை.ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அறுபது ஆண்டுகளாக நகைத்துறையில் நம்பிக்கையான பெயராக திகழ்கிறது, தற்போது அதன் 60-வது ஆண்டு சிறப்பை பெருமையுடன் கொண்டாடுகிறது. ... மேலும் பார்க்க

'StartUp' சாகசம் 3: `மின்சாரமில்லா குடிநீர் வடிகட்டி..!’ - சாத்தியமான கதை

இந்தியாவின் நீர் வளம்இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இங்குள்ள மக்களின் அன்றாட தேவைகளில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இந்தியாவின் நீர் வளம் சீரானதாக இல்லை. மழைக்க... மேலும் பார்க்க

``நான் யாரிடமும் 1 ரூபாய் கடன் வாங்கியதில்லை; திருடியதில்லை..'' - விஜய் மல்லையா சொல்வதென்ன?

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையாவின் பல்வேறு சொத்துகளை விற்று வந... மேலும் பார்க்க

நீங்களும் டைனோசருக்கு ஓனராகலாம்! விலை இவ்வளவுதான் - ஆனால் லாபம்?

பங்குச் சந்தையைப் போல டைனோசருக்கும் தனி சந்தை ரெடியாகிவிட்டது. பங்குச் சந்தைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. நிறுவனங்களின் பங்குகளுக்கு இருக்கும் சப்ளை, டிமாண்டுக்கு ஏற்... மேலும் பார்க்க

சரியும் அம்பானி, அதானி சொத்து மதிப்பு; அடுத்தடுத்து உள்ள 'செக்' - காரணம் என்ன?

இந்தியாவின் பிசினஸ் உலகில் மிக முக்கிய புள்ளிகளாக இருக்கும் இரண்டு 'A'-க்களான அம்பானி மற்றும் அதானியின் சொத்து மதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.ஆசிய அளவில... மேலும் பார்க்க

'StartUp' சாகசம் 2: `சிறுதானியத்தில் சக்ஸஸ் ஃபார்முலா' - ஆரைக்கல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

ஆரைக்கல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்'StartUp' சாகசம் 2இந்திய அரசு FPO(விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு)-களின் உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அதனை மேம்படுத்தவும் தீவிரமாக ஊக்குவித்துவருகிறது.விவசாய உ... மேலும் பார்க்க