தலித் மாணாக்கர் வெளிநாட்டில் கல்விகற்க அம்பேத்கர் பெயரில் உதவித்தொகை: கேஜரிவால்
நோயாளிகளை நடனமாட வைக்கும் காய்ச்சல்! உகாண்டாவின் டிங்கா டிங்கா நோய்
பொதுவாக காய்ச்சல் வந்தால், கை,கால்கள் நடுங்கும். ஆனால், உகாண்டாவில் மக்களுக்குப் பரவி வரும் மர்ம நோயால், நோயாளிகளின் உடல் ஒரு வித நடன அசைவு போல ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரை இந்த நோய் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவராத நிலையில், டிங்கா டிங்கா என்று உள்ளூர் மக்கள் இந்த நோய்க்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
குறிப்பாக பெண்களையும் சிறுமிகளையுமே இந்த நோய் தாக்குவதாகவும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கால் மற்றும் உடலை அசைத்தவாறு அதாவது நடனமாடிக்கொண்டே வருவது போல விடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.