ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜிஎஸ்டி விலக்கு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
BB Tamil 8: "செம்மையா நடிக்குறாங்க, பச்சையா நடிக்குறாங்க"- யாரைச் சொல்கிறார் விஜய் சேதுபதி?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 76 வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் சிறப்பாகச் செயல்பட்ட முத்துக்குமரன், பவித்ரா, ஜெப்ஃரி மூவரும் அடுத்த வார கேப்டன்சி டாஸ்க்கில் பங்கேற்றனர்.அப்போது முத்துக்குமரன் பவித்ராவுக்கு விட்டுக்கொடுத்து விளையாடினார். எச்சரிக்கையை மீறி மீண்டும் விட்டுக்கொடுத்து விளையாடியதால் கேப்டன்ஸி டாஸ்க் இந்த வாரம் ரத்து செய்யப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார்.
மேலும் இனிமேல் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸிடம் முத்துக்குமரன் அழுது மன்னிப்பு கேட்டார். அந்தக் காட்சிகள் நேற்று இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில் விஜய் சேதுபதி இதுதொடர்பாக பேசுகிறார்.
புரோமோ வீடியோவில், " போட்டியாளர்கள் கடந்த வாரத்தை விட இந்த வாரம் விளையாட்டைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விளையாட்டை அவர்களே விளையாடுவார்கள் என்று பார்த்தால் விட்டுக் கொடுக்கிறோம் என்று புதிதாக டிராமா போடுகிறார்கள்.
ஆனால் அந்த டிராமாவிற்கு ட்விஸ்ட் கொடுத்துவிட்டார் பிக் பாஸ். நல்லா நடிக்குறாங்க, செம்மையா நடிக்குறாங்க, பச்சையா நடிக்குறாங்கன்னு உள்ள ஆயிரம் பாராட்டாக இருக்கு. யார் பெஸ்ட்டா நடிச்சாங்கனு கேட்டு தெரிஞ்சுக்கலாமா? என்று விஜய் சேதுபதி சொல்கிறார்.