பஞ்சாங்கக் குறிப்புகள் - டிசம்பர் 23 முதல் டிசம்பர் 29 வரை #VikatanPhotoCards
ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜிஎஸ்டி விலக்கு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஜீன் தெரபிக்கு முற்றிலும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ஜிஎஸ்டி வரி குறித்து யூகத்தின் அடிப்படையில் தகவல்களைப் பரப்பக் கூடாது. வரி உயர்வு தொடர்பான செய்திகளை ஒருமுறை உறுதி செய்துவிட்டு ஊடகங்களில் ஒளிபரப்பலாம். செறிவூட்டப்பட்ட அரிசி கர்னல் மீதான ஜிஎஸ்டி வரி 18% சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பச்சை மிளகு, காய்ந்த மிளகு, உலர் திராட்சைகளை விற்பனை செய்யும்போது எந்தவிதமான ஜிஎஸ்டி வரையும் இல்லை. வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யும்போது அவற்றுக்கு வரி உண்டு. வங்கிக் கடன் பெற்றவர்கள் விதிகளை பூர்த்தி செய்யாவிடில் அபராதம் மீது ஜிஎஸ்டி கிடையாது. சுகாதாரம், ஆயுள் காப்பீடு பிரீமியம் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்த முடிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மாநிலங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
மும்பை படகு விபத்து: பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு
புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஜீன் தெரபிக்கு முற்றிலும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படாமல் இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்தது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, ஜனவரி மாதம் கூடி விவாதித்து ஒருமித்த கருத்தை எட்டிய பின்னரே இதில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
சனிக்கிழமை நடந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, "கவுன்சிலின் சில உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் கூடுதல் விவாதம் தேவை என்று நினைக்கிறார்கள்" என்றார்.