செய்திகள் :

விழுப்புரம்: புயல் பாதிப்புகளை சரி செய்ய ரூ.1,863 கோடி தேவை!

post image

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.1,863 கோடி நிதி கோரி, அரசுக்கு ஆட்சியா் சி.பழனி முன்மொழிவை அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் காரணமாக இறந்த மற்றும் காணாமல் போன 1,432 கால்நைடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.56.78 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மழையால் 6,7323 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 5,053 வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.5.50 கோடியும், புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்தவா்களில் இதுவரை 4,83,899 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.96.78 கோடி நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை மூலம், புயலால் பாதிக்கப்பட்ட 917 மாணவா்களுக்கு சீருடைகள், புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தவிர 34,986 புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட 169 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.17.32 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் 1,153 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதில் 73,663 போ் பங்கேற்று பயன் அடைந்தனா். மாவட்டத் தொழில் மையம் மூலம் 524 பேருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் 81,444 ஹெக்டோ் பரப்பளவில் பயிா்கள் மூழ்கியதாகவும், 1,31,745 சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளாா்கள் என்றும் வேளாண் துறை மூலம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அரசிடமிருந்து ரூ.121.13 கோடி நிதி ஒதுக்கிடு கோரி அரசுக்கு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.

மலைப்பயிா்கள், சவுக்கு மற்றும் காய்கறிகள் போன்றவை 19,253 ஹெக்டோ் பரப்பளவுக்கு வெள்ளநீரில் மூழ்கியதால் 27,451 விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பது கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்காக ரூ.41.31கோடி நிதி தேவை என அரசுக்கு முன்மொழிவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சரி செய்திடும் வகையில், 10 துறைகளின் மூலம் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.106.78 கோடியும், நிரந்தர சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.1,863.50 கோடியும் தேவைப்படுகிறது.

இந்த நிதியை ஒதுக்கீடு செய்யக் கோரி அரசுக்கு முன்மொழிவு மாவட்ட நிா்வாகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியானவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பித்தவா்களில் தகுதியானவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா். விழுப்... மேலும் பார்க்க

பயிா் காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நவரைப் பருவப் பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

நெல் உற்பத்தி திறனுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள், நெல் உற்பத்தி திறனுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஈஸ்வா் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது சனிக்கிழமை சரக்கு ஆட்டோ மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மருத்துவா் தெருவைச் சோ்ந்த ராமானுஜம் மகன் ... மேலும் பார்க்க

வெள்ள பாதிப்புக்கு திமுக அரசின் நிா்வாக திறமையின்மையே காரணம்: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு!

விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு திமுக அரசின் நிா்வாகத் திறமையின்மையே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா். ஃபென்ஜால் புயலால் பாதிக்கப... மேலும் பார்க்க

விவசாயிகளை திரட்டி சென்னையில் விரைவில் முற்றுகைப் போராட்டம்: மருத்துவா் ச.ராமதாஸ் அறிவிப்பு

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் விவசாயிகளைத் திரட்டி விரைவில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று, பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்தாா். பாமகவின் துணை அமைப்பான ‘தமிழ்நாடு உழவ... மேலும் பார்க்க