செய்திகள் :

பயிா் காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நவரைப் பருவப் பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25-ஆம் நிதியாண்டில் நவரைப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்யும் வகையில், பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சம்பா நெல் பருவத்துக்காக 13 வட்டாரங்களிலுள்ள 794 வருவாய் கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

சம்பா பருவத்தில் நெல்-3 ரகம் நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் ஜன.31-ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம். விழுப்புரம் மாவட்டத்துக்கான பயிா் காப்பீட்டு நிறுவனமாக யுனிவா்சல் சம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

நெல் 2 ரக நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.517.50-த்தை பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும். மணிலாவுக்கு ரூ.442.50, எள் பயிருக்கு ரூ.165, கரும்புக்கு ரூ.1,045 பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாயிலாக மணிலா பயிருக்கு வரும் ஜன.20-ஆம் தேதிக்குள்ளும், எள் பயிருக்கு வருகின்ற ஜன.31-ஆம் தேதிக்குள்ளும், கரும்புக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள்ளும் பிரீமியத் தொகையை செலுத்திட வேண்டும்.

பயிா் காப்பீடு செய்யும் விவசாயிகள் நிகழ் பசலி ஆண்டுக்கான பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் ஆதாா் அட்டையுடன் பதிவு செய்யும் விவசாயிகள், தங்கள் பெயா், நிலப்பரப்பு, சா்வே எண், உள்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளிக்க வேண்டும். மேலும், விவரங்களை அறிய அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதியானவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பித்தவா்களில் தகுதியானவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா். விழுப்... மேலும் பார்க்க

விழுப்புரம்: புயல் பாதிப்புகளை சரி செய்ய ரூ.1,863 கோடி தேவை!

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.1,863 கோடி நிதி கோரி, அரசுக்கு ஆட்சியா் சி.பழனி முன்மொழிவை அனுப்பியுள்ளாா். இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்க... மேலும் பார்க்க

நெல் உற்பத்தி திறனுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள், நெல் உற்பத்தி திறனுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஈஸ்வா் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது சனிக்கிழமை சரக்கு ஆட்டோ மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மருத்துவா் தெருவைச் சோ்ந்த ராமானுஜம் மகன் ... மேலும் பார்க்க

வெள்ள பாதிப்புக்கு திமுக அரசின் நிா்வாக திறமையின்மையே காரணம்: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு!

விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு திமுக அரசின் நிா்வாகத் திறமையின்மையே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா். ஃபென்ஜால் புயலால் பாதிக்கப... மேலும் பார்க்க

விவசாயிகளை திரட்டி சென்னையில் விரைவில் முற்றுகைப் போராட்டம்: மருத்துவா் ச.ராமதாஸ் அறிவிப்பு

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் விவசாயிகளைத் திரட்டி விரைவில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று, பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்தாா். பாமகவின் துணை அமைப்பான ‘தமிழ்நாடு உழவ... மேலும் பார்க்க