செய்திகள் :

செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

post image

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘மென்டல் மனதில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

இந்தப் படத்தினை ஜி.வி. பிரகாஷின் ’பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இயக்குநர் செல்வராகவன் கடைசியாக இரு ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தினை இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையும் படிக்க | ஒபாமாவின் விருப்பப் பட்டியலில் இந்தியத் திரைப்படம்!

இயக்குநராக இடைவெளி எடுத்திருந்த செல்வராகவன் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இவர் இறுதியாக, சொர்க்கவாசல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு இசையமைத்த ஜி. வி. பிரகாஷ் இந்தப் படத்தில் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மென்டல் மனதில்

ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்குப் பிறகு செல்வராகவன், ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணையும் படம் என்பதாலும், அவர் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பதாலும் ரசிகர்களிடயே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடிக்கு குவைத் உயரிய விருது - புகைப்படங்கள்

'ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்' விருதுடன் பிரதமர் நரேந்திர மோடி.குவைத்தில் பிரதமர் மோடியுடன் குவைத் அரசா் ஷேக் மெஷால் அல்-அகமது.கடந்த 1981ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சென்றுள்ள நி... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் முந்தைய கொண்டாட்டம் - புகைப்படங்கள்

நெக்ஸஸ் செலக்ட் சிட்டிவாக்கில், கிறிஸ்துமஸுக்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது சாண்டா கிளாஸ் உடையணிந்த நபருடன் கைகுலுக்கும் குழந்தை.கிறிஸ்துமஸுக்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது டெடி கரடிகளைப் பயன்படுத... மேலும் பார்க்க

கவனத்தை ஈர்க்கும் ‘கேம் சேஞ்சர்’ புதிய பாடல் விடியோ!

தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய பாடல் விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத... மேலும் பார்க்க

மகன் பெருமையடைந்தால் போதும் சார்! விஜய் சேதுபதியிடம் தீபக் நெகிழ்ச்சி!!

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் தனது குடும்பத்தை நினைத்து நடிகர் தீபக் நெகிழ்ச்சி அடைந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 11வது வாரத்தைக் கடந்துள்ளது. இதில் 76வ... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேசத்தந்தை: பாடகர் சர்ச்சை பேச்சு!

பிரபல பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையான கருத்தைத் தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா ஹிந்தி மற்றும் பெங்காளி மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரை ... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: விஜய் சேதுபதியிடம் பாராட்டுகளைப் பெற்ற ஜாக்குலின்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள ஜாக்குலின் விஜய் சேதுபதியிடம் பாராட்டுகளைப் பெற்றார். வார இறுதி நிகழ்ச்சியின்போது போட்டியாளர்களிடம் உரையாடும் விஜய் சேதுபதி, அவர்கள் பெயரைக்... மேலும் பார்க்க