இலங்கை அதிபர் சீனாவுக்கு பயணம்!
கொழும்பு: இந்திய பயணத்தை நிறைவு செய்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக அடுத்ததாக இலங்கைக்கு செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அநுர குமார இந்தியாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை(டிச. 15) வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடியுடன் திசநாயக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை நோக்கிச் செல்ல இருதரப்பும் ஒப்புக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்தாண்டு ஜனவரியில் சீனாவுக்கு அரசுமுறைப் பயணமாக செல்லவிருப்பதாக திசநாயக தெரிவித்துள்ளார். சீன முதலீடுகள் இலங்கையில் அதிகளவில் உள்ள நிலையில், இலங்கை - சீனா அதிபர்களிடையேயான பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.