வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தியின் வெற்றியை எதிர்த்து பாஜக வழக்கு!
பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 16 வீரா்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 வீரா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியதாவது:ஆப்கானிஸ்தானையொட்டிய தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்திலுள்ள ராணுவச் சாவடியில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினா். இதில் 16 வீரா்கள் உயிரிழந்தனா்; எட்டு போ் காயமடைந்தனா்.கடந்த சில மாதங்களில் பயங்கரவாதிகள் நடத்திய மிகப் பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.இதே மாவட்டத்தில் இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்ற இரண்டு நாள்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.