பிக் பாஸ் 8: விஜய் சேதுபதியிடம் பாராட்டுகளைப் பெற்ற ஜாக்குலின்!
ரஷிய தொலைதூர நகரில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
தங்கள் தலைவா் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து, அந்த நாட்டின் தொலைதூரத்தில் அமைந்துள்ள நகரில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
போா் முனைக்கு சுமாா் 1,000 கி.மீ. தொலைவிலுள்ள காஸன் நகரில் உக்ரைன் வீசிய ட்ரோன்கள் குடியிருப்பு அடுக்குமாடி கட்டடங்களைத் தாக்கின (படம்). இது குறித்து அந்த நகரம் அமைந்துள்ள டாடா்ஸ்தான் மாகாண ஆளுநா் ருஸ்தம் மினிகானொவ் கூறுகையில், உக்ரைனின் ட்ரோன்கள் நகரின் ஆறு கட்டடங்களைச் சேதப்படுத்தியதாகக் கூறினாா்.இந்தத் தாக்குதலில் காயமடையவில்லை என்று அதிகாரிகள் கூறினா். இருந்தாலும், தாக்குதல் காரணமாக காஸன் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. அந்த நகரில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடும் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை முழுவதும் ரத்துசெய்யப்பட்டன.பாதுகாப்பு கொள்கை காரணமாக, இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அரசு நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.