ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட வேண்டும்: முன்னாள் தலைமைப் பயிற்சியாளர்
குடும்பத் தகராறால் ஒரு வயது மகனின் தலையைத் துண்டித்து படுகொலை! தந்தை கைது!
கலிஃபோர்னியாவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரு வயது மகனின் தலையைத் துண்டித்து கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கலிஃபோர்னியாவில் சாக்ரமென்டோ கவுண்டி நகரில், கணவர் கொடுமைப்படுத்துவதாக காவல் அதிகாரிகளிடம் பெண் ஒருவர் தொலைபேசி வாயிலாக புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, புகார் அளித்த பெண்ணின் இருப்பிடத்துக்கு சென்ற அதிகாரிகள் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆண்ட்ரி டெம்ஸ்கி என்பவர் அவரது மனைவியையும், மாமியாரையும் குடும்பத் தகராறு காரணமாகத் தாக்கியுள்ளார். அவரது தாக்குதலால் காயமடைந்த அவரது மாமியார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும், அந்தப் பெண்ணை வீட்டுக்கு வெளியே தள்ளி, தனது குழந்தையுடன் வீட்டில் இருப்பதாகவும் பெண் கூறினார். தொடர்ந்து, தனது ஒரு வயது குழந்தையையும் ஆண்ட்ரி தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அச்சம் ஏற்பட்டிருப்பதாகவும் பெண் கூறினார்.
இதனையடுத்து, வீட்டின் கதவைத் திறக்குமாறு ஆண்ட்ரியை காவல் அதிகாரிகள் வற்புறுத்தினர். ஆனால், கதவைத் திறக்காததால், அதிரடியாக காவல் அதிகாரிகள் வீட்டினுள்ளே நுழைந்தனர். வீட்டுக்குள் நுழைந்த காவல் அதிகாரிகள், குழந்தையைத் தேடினர்.
ஆனால், படுக்கையறைக்குள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், குழந்தை படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, ஆண்ட்ரி மீது கொலை, மனைவி மீதான தாக்குதல் உள்ளிட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜாமீன் இல்லா கைது செய்தனர். மேலும், செவ்வாய்க்கிழமையில் நீதிமன்றத்தில் ஆண்ட்ரியை முன்னிலைப்படுத்த உள்ளனர்.
இதையும் படிக்க:ஜொ்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் காா் தாக்குதல்: 5 போ் உயிரிழப்பு