இந்தியா தொடர், சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
குடிசையில் தீ பற்றியதில் 2 பேத்திகளுடன் முதியவர் பலி!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் குடிசை வீட்டில் தீ பற்றியதில், தனது இரண்டு பேத்திகளுடன் 65 வயது முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சிவப்புரி மாவட்டத்தில் நேற்று (டிச.21) இரவு 11.30 மணியளவில் குளிர் காய்வதற்காக கொளுத்திய நெருப்பு குடிசையில் பற்றிக் கொண்டதில் அந்த குடிசையினுள் இருந்த ஹஜாரி பஞ்சரா (வயது-65) மற்றும் அவரது பேத்தி சந்தியா (10) ஆகிய இருவரும் பலியாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த மீட்புக் குழுவினர் தீயை அணைத்து, உயிருக்குப் போராடிய அவரது மற்றொரு பேத்தியான அனுஷ்காவை (5) மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், ஆனால் அந்த சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானர்.
இதையும் படிக்க: தேர்வு பயம்: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்!
இதுகுறித்து அம்மாநில காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குளிர் காய்வதற்காக கொளுத்திய அடுப்பிலிருந்து பரவிய நெருப்பினால்தான் இப்படியொரு துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச அரசின் சார்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் எனவும், அவர்களது இறுதிச் சடங்கிற்கான செலவையும் அரசே ஏற்கும் என பைராடு பகுதி தாசில்தார் கூறியுள்ளார்.