செய்திகள் :

ஜம்முவில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது!

post image

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோப்பூரின் தங்கிவாச்சா பகுதியில், இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறை ஆகிய மூன்று படைகளும் இணைந்து நேற்று (டிச.21) நடத்திய சோதனையின்போது, பயங்கரவாதிகளின் கூட்டாளிகளான இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அப்துல் ரஷீத் பட் மற்றும் சஜ்ஜத் இஸ்மாயில் ஹூர்ரா ஆகிய இருவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, அதன் தோட்டாக்கள், இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் ரூ.10,600 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தியின் வெற்றியை எதிர்த்து பாஜக வழக்கு!

முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப் பதிவின்போது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் உத்தரவின் பேரில், பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாதிகள், அவர்களது கூட்டாளிகள் அவர்களுக்கு உதவி செய்பவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என பலரையும் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

பொங்கல் நாளில் யுஜிசி நெட் தேர்வு: தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி கடிதம்!

தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் நாளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) - பேராசிரியர் தகுதித் தேர்வு (நெட்)நடத்துவதற்கான முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர... மேலும் பார்க்க

தொடரும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; மீனவா்களை பாதுகாக்க வேண்டும்: முத்தரசன் கண்டனம்

தொடரும் கடற்கொள்ளையா்கள் தாக்குதலிலிருந்து தமிழக மீனவா்களை பாதுகாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகில் உள்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் கேரளம் கொண்டு செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்: ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்துக்கே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார். சுத்தமல்லியை அ... மேலும் பார்க்க

அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பணியில் அமர்த்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.பாளையங்கோட்டையை அடுத்த கீழநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம். ... மேலும் பார்க்க

40 ஆண்டுகளுக்கு மேல் சிறை, உலகின் தனிமையான மனிதக்குரங்கு!

தாய்லாந்து நாட்டிலுள்ள தனியார் வனவிலங்கு காட்சிசாலையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு மனிதக்குரங்கு தனிமையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் பாங்காக்கிலுள்ள ஒரு வணிக வளாகத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது... மேலும் பார்க்க

தென் கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள் வெற்றி!

தென் கொரியாவின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3வது ராணுவ உளவுச் செயற்கைக்கோள் நேற்று (டிச.21) அமெரிக்க விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்த... மேலும் பார்க்க