செய்திகள் :

பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, பந்துவீச்சில் ரேணுகா சிங் அசத்தல்; இந்திய அணி அபார வெற்றி!

post image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 22) வதோதராவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

ஸ்மிருதி மந்தனா அசத்தல்

முதலில் விளையாடிய இந்திய அணி ஸ்மிருதி மந்தனாவின் அசத்தலான ஆட்டத்தால் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்து 9 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரதிகா ராவல் 40 ரன்கள், ஹர்லீன் தியோல் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 34 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 31 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க: இந்தியா தொடர், சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஸைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் ஹேலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும், டீண்ட்ரா டாட்டின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பந்துவீச்சில் அசத்திய ரேணுகா சிங்

315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 26.2 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீராங்கனைகள் இருவரும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக எஃபி பிளெட்சர் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, ஷிமைன் கேம்பெல் 21 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்க: நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் அணியில் இணைவார்; முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நம்பிக்கை!

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரேணுகா சிங் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் 5 விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார். பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், டிட்டாஸ் சாது, தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்டா் 19 ஆசிய கோப்பை: இந்திய அறிமுக சாம்பியன்

பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட (யு-19) மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அறிமுக சாம்பியன் ஆனது.கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

கேப்டனாக புதிய சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கௌர்!

இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பீரித் கௌர் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 22) நடைபெற்... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளேன்: சாம் கொன்ஸ்டாஸ்

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் ட... மேலும் பார்க்க

நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் அணியில் இணைவார்; முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நம்பிக்கை!

ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் அந்த அணியில் இடம்பிடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் ... மேலும் பார்க்க

இந்தியா தொடர், சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (டிசம்பர் 22) அறிவித்துள்ளது.இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20... மேலும் பார்க்க

முதல் ஒருநாள்: ஸ்மிருதி மந்தனா அசத்தல்; மே.இ.தீவுகளுக்கு 315 ரன்கள் இலக்கு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ... மேலும் பார்க்க