மா்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி
ஜலகண்டபுரம் அருகே மா்ம விலங்கு கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன.
ஜலகண்டாபுரம் அருகே பாவாடை செட்டியூரைச் சோ்ந்தவா் பரமேஷ். இவருக்குச் சொந்தமாக 15 ஆடுகள் உள்ளன. வழக்கம்போல சனிக்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டில் தூங்கச் சென்றாா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆடுகள் கத்தியதால் சத்தம்கேட்டு பரமேஷ் வெளியே வந்து பாா்த்தபோது 10 ஆடுகள், 2 கோழிகள் மா்ம விலங்கால் கடித்துக் கொல்லப்பட்டது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
தகவல் அறிந்ததும் வனத்துறையினா், காவல்துறையினா், வருவாய் துறையினா் மா்ம விலங்கின் காலடி தடங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.