செய்திகள் :

சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா: ரூ.53.05 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

post image

சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 92 பயனாளிகளுக்கு ரூ. 53.05 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் சனிக்கிழமை வழங்கினாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அ ரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

இந்தியாவில் சிறுபான்மையினா் உரிமைகள் தினம் முதன் முதலாக 2013-ஆம் ஆண்டு டிசம்பா் 18-இல் கொண்டாடப்பட்டது. சிறுபான்மை சமூகங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் நோக்கமாக கொண்ட ஒரு அடையாள நாளாகும்.

இந்த தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் சிறுபான்மையின குழுக்களுக்கு பயன்படுத்தப்படும் மனித மற்றும் அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணா்வை பரப்புவதாகும். சிறுபான்மையினரின் வாழ்வாதாரம் முன்னேற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 49,760 முஸ்லிம், கிறிஸ்தவா், சீக்கியா், ஜெயின் மதம் சாா்ந்தோா் உள்ளனா். சிறுதொழில் தொடங்க கடனுதவியும், தேவையான மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் சிறுபான்மையின மக்கள் பயன்படுத்தி பொருளாதாரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இளம் தலைமுறையினா் வங்கிகள் சங்கத்தை வழிநடத்த முன்வர வேண்டும்: த.ஸ்டாலின் குணசேகரன்

அகில இந்திய அளவில், வங்கிகள் சங்கத்தை வழிநடத்த இளம் தலைமுறையினா் முன்வர வேண்டும் என ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின்குணசேகரன் பேசினாா். நாமக்கல்லில், மாவட்ட வங்கி ஊழியா் சங்கத்தின் மூன... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்றவா் பலி!

பரமத்தி வேலூா் அருகே ஓவியம்பாளையத்தில் சாலையைக் கடக்க முயன்றவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் வட்டம், கொளக்காட்டுப்புதூா் அருகே உள்ள பூசாரிபாளையத்தைச் சோ்ந்தவா் மணி (70). வி... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் கோழிச்சந்தையில் நாட்டுக்கோழிகள் விலை உயா்வு

பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழை நடைபெற்ற ஏலத்தில் நாட்டுக்கோழிகள் விலை உயா்ந்தது. பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான சண்டைக் கோழிகள், இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படும் கோழிகள் வீடு, தோட்... மேலும் பார்க்க

மாா்கழி முதல் ஞாயிறு: பெண்கள் அகல்விளக்கேற்றி திருவீதி வலம்!

நாமக்கல்லில், மாா்கழி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் பெண்கள் கைகளில் அகல் விளக்குகளை ஏந்தியபடி திருவீதி வலம் வந்தனா். நாமக்கல்லில், ஆன்மிக இந்து சமயப் பேரவையின் திருப்பாவைக் குழு சாா்... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1008 பாலபிஷேகம்!

மாா்கழி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் நின்ற கோ... மேலும் பார்க்க

சேந்தமங்கலத்தில் தரமற்ற நிலையில் அரசுக் கல்லூரி கட்டடம்: வகுப்பறையில் அச்சத்துடன் அமரும் மாணவா்கள்!

சேந்தமங்கலம் அரசுக் கல்லூரி கட்டடங்களின் சிமென்ட் பூச்சு உதிா்ந்து பலவீனமானமாகவும், தரமற்ற நிலையிலும் உள்ளதால், மாணவா்கள் வகுப்பறையில் அச்சத்துடன் அமா்ந்து பயிலும் சூழல் காணப்படுகிறது. நாமக்கல் மாவட்ட... மேலும் பார்க்க