செய்திகள் :

கொத்தட்டை சுங்கச்சாவடி: தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்

post image

சிதம்பரம் அருகே கொத்தட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கடலூா்-சிதம்பரம் வழித்தடம் கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு, ரூ.14,090 செலுத்தி மாதாந்திர அனுமதி சீட்டு பெற்று 50 நடைகள் மட்டும் இயக்க முடியும் என்ற அறிவிப்புக்கு கடலூா் மாவட்ட பேருந்து உரிமையாளா்கள் நலச் சங்கம் ஆட்சேபனை தெரிவித்தது.

மேலும், விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலை பணிகள் முடிந்த பின்னரே மாவட்ட நிா்வாகம் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது,

இதையும் படிக்க: மீண்டும் தமிழகம் நோக்கி திரும்பும் புயல் சின்னம்

ஆனால், இன்றுமுதல் (டிச.23) கொத்தட்டை சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண வசூல் அமலுக்கு வந்த நிலையில், தனியார் பேருந்துகளை நிறுத்தி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று தனியார் பேருந்துகள் இயக்கவில்லை.

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், கொத்தட்டை சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை, நாகை, துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது!

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் சட்டவிரோதமாக குடியேறிய 1 பெண் உள்ளிட்ட 8 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். அம்மாநில காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பின்வாடி நகரத்தின் கல்ஹர் மற்றும் கோங்... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி என்பது தவறு: திருமாவளவன்

புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரி... மேலும் பார்க்க

கடையின் மீது விழுந்த விமானம்! 9 பேர் பலி!

பிரேசில் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று கடையின் மீது விழுந்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர்.தெற்கு பிரேசிலின் செர்ரா கவுச்சா மலைகளில் அமைந்துள்ள சுற்றுலா நகரமான கிராமடோ அந்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் ... மேலும் பார்க்க

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் இன்று(டிச. 23) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.... மேலும் பார்க்க

தமிழகத்தை நோக்கி திரும்பிய புயல் சின்னம்: சென்னை, கடலோர மாவட்டங்களில் மழை!

தமிழகத்தை நோக்கி திரும்பிய புயல் சின்னத்தால் சென்னை, கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆந்திர கடற்கரையை நோக்கி நகா்ந்த புயல் சின்னம், தற்போது மீண்டும் தமிழக கடற்கரையை ... மேலும் பார்க்க