டி.ஒய். சந்திரசூட் முதல் சேகர் யாதவ் வரை... 2024 - இல் நீதிபதிகளும் நீதித்துறையு...
புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி என்பது தவறு: திருமாவளவன்
புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது:
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்து வருகிறார். திமுக கூட்டணி தமிழ்நாட்டில் பல இடங்களில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது உறுதி.
எதிர்க்கட்சிகள் ஒரே அணியிலே திரளுவார்கள் என்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை. வேல்முருகன் தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
பாஜக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை, தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அது வெற்றிகரமாக அமையாது என்பதைக் கடந்த தேர்தலில் மக்கள் உணர்த்தி உள்ளனர்.
பத்திரப்பதிவுத் துறையில் கட்டணம் உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், இது குறித்து முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு எப்போதும் திமுக கூட்டணி உறுதுணையாக இருக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தது தவறானது ஆகும்.
இதையும் படிக்க: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர வீதியுலா!
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதைக் கண்டித்து இந்தியா முழுவதும் வரும் 28ஆம் தேதி அம்பேத்கர் அமைப்புகள், பல்வேறு கட்சியினர்கள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
குறிப்பாக, சென்னையில் வரும் 28 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அம்பேத்கர் அம்பேத்கார் என்று ஆயிரம் முறை முழக்கங்கள் எழுப்பப்படும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முழுமையாக போதைப் பொருளை தடுக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் முற்றிலுமாக போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்று பேசினார்.