முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இல்லை; இந்திய அணிக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி!
பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போா் மீது நடவடிக்கை
பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூரில் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பெண்கள் சம்பந்தமான வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள், ரௌடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
இதில் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.