தமிழ் சினிமாவில் Middle aged மனிதர்களோட கதைகள் வரதேயில்ல! - Thambi Ramaiah | Uma...
ஹோண்டாவுடன் இணைகிறது நிஸ்ஸான்!
டோக்கியோ: கார் உள்ளிட்ட ஆட்டோமொபைல் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் ஹோண்டாவுடன் நிஸ்சான் நிறுவனம் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(டிச. 23) கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பான முறையான ஒப்பந்தம் ஜூன் மாதம் ஏற்படுமென்றும், 2026-ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவத்தில் கையெழுத்தாகும் என்றும் ஹோண்டா நிறுவன தலைவர் டோஷிஹிரோ மிபே தெரிவித்துள்ளார்.
ஜப்பானை சேர்ந்த இவ்விரு நிறுவனங்களும் இணைவதன் மூலம், உலகளவில் ஆட்டோமொபைல் விற்பனையில் 3-ஆவது பெரிய நிறுவனமாக உருவெடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மிட்சுபிஷி நிருவனமும் இவர்களுடன் இணைய முனைப்பு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குரித்த பேச்சுவார்த்தையில் மேற்கண்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.