தமிழ் வளா்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது அமைச்சா் மா.சுப்பி...
Vinod Kambli: வினோத் காம்ப்ளி உடல்நிலை கவலைக்கிடம்; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிறது. அவர் சமீபத்தில் மும்பை தாதர் சிவாஜிபார்க்கில் தனக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்த மறைந்த பயிற்சியாளர் ரமாகாந்த்தை கெளரவிக்கும் விழாவில் கலந்து கொண்டார். அதில் தனது பழைய நண்பரான சச்சின் தெண்டுல்கரை சந்தித்தார். வீல் சேரில் இருந்தபடி சந்தித்தார். இதையடுத்து அவருக்கு உதவி செய்ய அவருடன் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் முடிவு செய்தனர்.
52 வயதாகும் வினோத் காம்ப்ளி அதிக அளவில் மது அருந்தி கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட மும்பையில் உள்ள தனது வீட்டிற்குள் குடிபோதையில் நடக்க முடியாமல் நடந்து சென்றார்.
தற்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென உடல் நிலை மோசமடைந்ததால் மும்பை புறநகரில் இருக்கும் தானேயில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாகவும், அதேசமயம் சீராகவும் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வினோத் காம்ப்ளி வெளியிட்டுள்ள யூடியூப் வீடியோவில், தற்போது நலமாக இருப்பதாகவும், எனது மனைவி என்னை நன்றாக கவனித்துக்கொள்வதாகவும், என்னை மூன்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். அஜய் ஜடேஜா என்னை வந்து பார்த்துச் சென்றார். எனக்கு சிறுநீரக பிரச்னை இருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு தலை சுற்றல் ஏற்பட்டு கீழே விழுந்துவிட்டேன். என்னை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும்படி டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர். இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு உதவி செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் தெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்கள் ஆவர். ஆனால் சச்சின் தனக்கு சரியாக உதவி செய்யவில்லை என்று வினோத் காம்ப்ளி குறைபட்டுக்கொண்டார். அதோடு தான் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், கிரிக்கெட் வாரியம் கொடுக்கும் 30 ஆயிரம் போதுமானதாக இல்லை என்றும், வேலை எதுவும் இல்லை என்று வினோத் காம்ப்ளி குறிப்பிட்டுள்ளார்.