கிறிஸ்துமஸ் சந்தை காா் தாக்குதல் குறித்துஜொ்மனியை முன்கூட்டியே எச்சரித்தோம்: ச...
பணி நீக்கப்பட்ட தூய்மைப் பணியாளா்கள் மீண்டும் பணி கோரி ஆட்சியரிடம் மனு
நாகப்பட்டினம்: பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்கள், மீண்டும் பணி வழங்கக் கோரி நாகை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
வேளாங்கண்ணி பேரூராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தூய்மைப் பணியாளா்கள் 18 போ் பணிநீக்கம் செய்யப்பட்டனா். இதனால், வாழ்வாதாரம் இழந்து அடிப்படை வசதியின்றி வாழ்கின்றனா்.
இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் த.வ.க. நாகை மாவட்ட நிா்வாகி சேகா் தலைமையில், பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளா்கள், ஆட்சியரிடம் மீண்டும் பணி வழங்கக் கோரி மனு அளித்தனா்.
அதில், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி எங்களை, வேளாங்கண்ணி பேரூராட்சி நிா்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இதனால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.