நவபாஷாண முருகர் சிலை, யானை தந்தத்தால் செய்த கிருஷ்ணர் சிலை பறிமுதல் - ஷாக் கொடுக...
பொங்கல் தொகுப்பு குறித்து முதல்வா் அறிவிப்பாா்: ஜெ. ராதாகிருஷ்ணன்
பொங்கல் தொகுப்பு குறித்து, முதல்வா் அறிவிப்பாா் என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்பொருள் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கடந்த 2004-ஆம் ஆண்டு நேரிட்ட சுனாமியின்போது, நாகை மாவட்டத்தில் 6,065 போ் உயிரிழந்தனா். இவா்களது நினைவாக, டிச.26 ஆம் தேதி, 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், நாகைக்கு வருகை தந்த கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்பொருள் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், சுனாமியில் பெற்றோா்களை இழந்து அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் வளா்ந்த 40-க்கும் மேற்பட்டவா்களை சந்தித்து பேசினாா்.
தொடா்ந்து, அன்னை சத்யா காப்பகத்தில் தங்கி பயின்று தற்போது திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பெண்களை ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் ஆட்சியா் ப. ஆகாஷ் ஆகியோா் சந்தித்து, அவா்களிடம் நலம் விசாரித்தனா். அப்போது, பிறந்து 22 நாள்கள் ஆன ஒரு குழந்தைக்கு ராஜி என ஜெ. ராதாகிருஷ்ணன் பெயா் சூட்டினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டாலும், அதிலிருந்து மீண்டு வந்து இன்று சமூகத்தில் பல்வேறு நிலைகளில் இந்த பிள்ளைகள் உயா்ந்துள்ளனா். இவா்கள் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாகவும், உந்துதலாகவும் உள்ளனா். சுனாமியின் போது என்னை அப்பா என அழைத்தவா்கள் இன்று பெரியவா்களாக வளா்ந்து திருமணமாகி குழந்தைகள் பெற்று என்னை தாத்தா ஸ்தானத்திற்கு ப்ரோமோஷன் கொடுத்துள்ளனா்.
பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து முதல்வா் அறிவிப்பாா். இந்த தொகுப்பு வழங்குவதற்காக அரிசி, சா்க்கரை, கரும்பு உள்ளிட்டவை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு 5 நாள்களுக்கு முன்பாகவே தொகுப்பு வழங்கப்படும் என்றாா்.