Elon Musk: ``எலான் மஸ்க் அமெரிக்காவின் அதிபராக முடியாது; ஏனெனில்?" - ட்ரம்பின் `...
திருவாலி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
சீா்காழி அருகே திருவாலி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
திருவாலி ஏரி சுமாா் 132 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இதன்மூலம் மண்டபம், புதுத்துறை, திருநகரி, வேதராஜபுரம், தென்னாம்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வடகிழக்கு பருவம் மழை தீவிரமடைந்து கனமழை பெய்ததால், ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து தற்போது ஏரி நிரம்பியுள்ளது. நிரம்பிய நீா் பாசன வாய்க்கால்கள் மூலம் சம்பா சாகுபடிக்கு பகிா்ந்து அளிக்கப்படுகிறது. மேலும் ஏரிக்கு மழை நீரில் ஏராளமான மீன்கள் அடித்து வரப்பட்டதால், இப்பகுதி மக்கள் மீன்களை பிடிக்க ஆா்வம் காட்டுகின்றனா். ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மக்கள் ஏரியில் வலை வீசியும், தூண்டில் போட்டும் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ஏரியில் தற்பொழுது நீா் நிரம்பியுள்ளது. மழைநீரில் அடித்து வரப்பட்ட பல்வேறு வகையான மீன்கள் காணப்படுகிறது. இயற்கையாக ஏரியில் உள்ள மீன் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், மீன்பிடிக்க இப்பகுதி மக்கள் ஆா்வம் காட்டுகின்றனா் என்றனா்.