செய்திகள் :

`சேர்த்து வைத்த தேர்தல் தோல்வி?’ - பல ஆண்டுகளுக்குப்பின் பேசிக்கொண்ட ராஜ் தாக்கரே - உத்தவ் தாக்கரே

post image

மகாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து ராஜ் தாக்கரே 2006-ம் ஆண்டு விலகுவதற்கு முன்பு அவருக்கும், உத்தவ் தாக்கரேயிக்கும் இடையே கட்சியில் அதிகாரப்போட்டி நிலவியது. உத்தவ் தாக்கரே பால் தாக்கரேயின் மகன், ராஜ் தாக்கரே பால் தாக்கரேயின் மருமகன். இப்போட்டியால் ராஜ் தாக்கரே கட்சியை உடைக்காமல் தான் மட்டும் தனித்து வெளியில் வந்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு இருவரும் பெரிய அளவில் சந்தித்து பேசிக்கொண்டது கிடையாது. எதாவது நிகழ்ச்சியில் சந்திக்க நேரிட்டாலும் ஒதுங்கி செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தனர்.

ராஜ் தாக்கரே எப்போதும் தனித்தே தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். கடந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவோடு சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இறுதியில் தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தார்.

ராஜ் தாக்கரே மகன் கூட தேர்தலில் தோற்றுப்போனார். இதேபோன்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிறகும் படுதோல்வியை கண்டுள்ளது. எனவே வரும் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உத்தவ் தாக்கரே கட்சி முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் பல ஆண்டுகளாக சந்தித்து பேசிக்கொள்ளாத உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் திருமணம் ஒன்றில் சந்தித்து பேசிக்கொண்டனர்.

ராஜ் தாக்கரேயின் சகோதரி மகன் திருமணத்தில் இவர்கள் சந்தித்துக்கொண்டனர். உத்தவ் தாக்கரே தனது மனைவியுடன் திருமணத்தில் கலந்து கொண்டார். இருவரது குடும்பமும் திருமணத்தில் சந்தித்து பேசிக்கொண்டனர்.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு நடந்துள்ள இச்சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.சஞ்சய் ராவத் சொல்லிக் கொண்டிருக்கிறார். மற்றொரு புறம் ராஜ் தாக்கரேயை பா.ஜ.க தனது கூட்டணியில் சேர்த்துக்கொள்ள மறுத்து வருகிறது. எனவே தாக்கரே சகோதரர்களை தேர்தல் கூட்டணியில் சேர்க்க அவர்களது குடும்பம் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

இச்சந்திப்பு குறித்து சிவசேனா அமைச்சர் சஞ்சய் சிர்ஷாத் கூறுகையில், ''இச்சந்திப்பில் அரசியல் முக்கியத்தும் இருக்காது. இதற்கு முன்பு பல முறை ராஜ் தாக்கரே உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணி வைக்க முயன்றார். ஆனால் உத்தவ் தாக்கரே அதற்கு சம்மதிக்கவில்லை'' என்றார்.

`அம்பேத்கர்... அம்பேத்கர் என்று ஆயிரம் முறை முழக்கங்கள் எழுப்புவோம்!' - அமித் ஷாவைக் கண்டித்த திருமா

காட்டுமன்னார் கோவில் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கி, அந்தப் பகுதிகளைப் பார்வையிட... இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வர... மேலும் பார்க்க

`மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருகிறது' - அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு

மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்திப்பதாகவும், அதன் காரணமாகவே பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தாமதிப்பதாகவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்... மேலும் பார்க்க

கரூர்: `அல்லல்படும் மாணவர்கள்' - ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி; மழை நீரில் சேதமான தற்காலிக பாதை

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது வேங்கடதாம்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள ஆத்துவாரியில் தரைப்பாலம் ஒன்று இருந்தது. இந்நிலையில், மழை காலங்களில் அந்தத் தரைப்பாலத்தில் தண்ணீர் அதிகம் செல்லும்போது... மேலும் பார்க்க

'முதல்வருக்கு கள நிலவரம் தெரியவில்லை; 200-ல் இரண்டு பூஜ்ஜியத்த எடுங்க' - வானதி சீனிவாசன் சொல்வதென்ன?

`தமிழ்நாட்டை தனி தீவாக..!’பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுகவின் செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசை... மேலும் பார்க்க

மதுரை: தனியாக வரும்படி அழைத்த உதவி ஜெயிலர்; ப்ளேர்னு அறைவிட்ட உறவினர் - சஸ்பெண்ட், போக்சோவில் கைது

முன்னாள் சிறைவாசி ஒருவர் மதுரை பைபாஸ் சாலையில் குடும்பத்தினருடன் சிறு உணவகம் நடத்தி வருகிறார். இங்கு அடிக்கடி சாப்பிட சென்ற மதுரை மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலர் பாலகுருசாமி, முன்னாள் சிறைவாசியின் மகளி... மேலும் பார்க்க

Elon Musk: ``எலான் மஸ்க் அமெரிக்காவின் அதிபராக முடியாது; ஏனெனில்?" - ட்ரம்பின் `பளீச்' பதில்

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் டெஸ்லா நிறுவனர் எ... மேலும் பார்க்க