BB Tamil 8 : அன்ஷிதா, ஜாக்குலின்... வெளியான நாமினேஷன் பட்டியல்; அடுத்து வெளியேறப்போவது யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 78- வது நாளுக்கான புரோமோ வெளியாகி விட்டது.
பிக் பாஸ் 8 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. டபுள் எவிக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஞ்சித் மட்டும் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகியாகிறது. முதல் புரோமோவில் போட்டியாளர்கள் ஒவ்வொரு காரணங்களைக் கூறி நாமினேட் செய்கிறார்கள்.
அந்தவகையில் ஜாக்குலின் அன்ஷிதாவையும், அருண் ஜாக்குலினையும், ரயான் ஜெப்ஃரியையும், விஷால் மற்றும் அன்ஷிதா இருவரும் மஞ்சரியையும் அதேபோல தீபக், ராணவையும் நாமினேட் செய்கிறார்கள். இரண்டாவது ப்ரோமோவில், இந்த வாரம் நாமினேட் ஆனவர்களை பிக் பாஸ் சொல்கிறார். அந்தவகையில் அன்ஷிதா, ஜாக்குலின், ஜெப்ஃரி, ராணவ், விஷால், மஞ்சரி, பவித்ரா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.