பயிற்சி பிட்சுகளால் இந்திய அணி அதிருப்தி! -மெல்போர்ன் திடல் மேற்பார்வையாளர்
இந்திய அணியில் பந்துவீச்சு வலுவாக இல்லை: புஜாரா
இந்திய அணியில் பந்துவீச்சு வலுவாக இல்லை என இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் அடுத்த போட்டி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமனில் உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற கடைசி இரண்டு போட்டிகள் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளேன்: சாம் கொன்ஸ்டாஸ்
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறுவது அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரையில், ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தாலும், மற்ற பந்துவீச்சாளர்கள் அவருடன் இணைந்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற தவறுகின்றனர்.
பந்துவீச்சு வலுவாக இல்லை
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியில் பந்துவீச்சு வலுவாக இல்லை என மூத்த வீரர்களில் ஒருவரான புஜாரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியைப் பொருத்தவரையில் எனக்கு இருக்கும் மிகப் பெரிய கேள்வியும் கவலையும் அணியின் பந்துவீச்சு சற்று வலுவாக இல்லாமல் இருப்பதே. பந்துவீச்சை ஒப்பிடுகையில் பேட்டிங்கில் சிறிது பரவாயில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இருப்பினும், மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை ஆட்டக்காரர்கள் ரன்கள் எடுக்கின்றனர்.
இதையும் படிக்க: நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் அணியில் இணைவார்; முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நம்பிக்கை!
இந்திய அணியில் பந்துவீச்சு வலுவாக இல்லை. அதுதான் மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. ஏனெனில், உங்களால் நிதீஷ் ரெட்டியை அணியிலிருந்து நீக்க முடியாது. அதேபோல, ஜடேஜாவை அணியிலிருந்து நீக்க முடியாது. அஸ்வின் ஓய்வினை அறிவித்துவிட்டதால், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் மெல்போர்னில் களமிறங்க முடியாது. மூன்று பிரதான பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசுகிறார்கள். நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்கத் தவறுகிறார்கள். டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் என்றார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.