தமிழ் வளா்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது அமைச்சா் மா.சுப்பி...
முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இல்லை; இந்திய அணிக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி!
முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இல்லாததால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியுடன் இணையமாட்டார் என்பதை பிசிசிஐ இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்கவுள்ளது. முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளுக்காக இந்திய அணியுடன் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிக்க:அஸ்வினுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட இளம் ஆல்ரவுண்டர்!
இந்த நிலையில், முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இல்லாததால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியுடன் இணையமாட்டார் என்பதை பிசிசிஐ இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முகமது ஷமியை பிசிசிஐயின் மருத்துவக் குழு முழுவதுமாக பரிசோதனை செய்தது. அதன் படி, அவர் முழு வீச்சில் பந்துவீசுவதற்கு அவரது முழங்காலுக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுவது தெரிய வந்தது. அதன் காரணமாக, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் அவரால் இந்திய அணிக்காக விளையாட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தொழிலதிபரை மணம் புரிந்த பி.வி.சிந்து!
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் கடைசியாக முகமது ஷமி இந்திய அணிக்காக விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.