செய்திகள் :

பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்!

post image

பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் உடல்நலக்குறைவால் காலமானார்.

1970 மற்றும் 1980 ஆண்டுகளில் அங்குர், நிஷாந்த் மற்றும் மந்தன் போன்ற திரைப்படங்களின் மூலம் இந்திய இணை சினிமா இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற மூத்த திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் திங்கள்கிழமை காலமானர். அவருக்கு வயது 90.

ஷியாம் பெனகல் காலமானதை அவரது மகள் பியா தெரிவித்தார். மக்களுக்கான பிரச்சினைகளை படமாக்குவதில் மிகவும் புகழ்பெற்றவரான ஷியாம் பெனகல் பல ஆண்டுகளாக சிறுநீரக நோயால் மும்பை வொக்கார்ட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

மரணமடைந்த பெனகலுக்கு நீரா பெனகல் என்ற மனைவியும் பியா என்ற மகளும் உள்ளனர். இவர் தனது 90வது பிறந்தநாளை கடந்த 10 நாள்களுக்கு முன்பு டிசம்பர் 14 அன்று கொண்டாடினார்.

பெனகல் ஆவணப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கினார். அவரது படங்களில் பூமிகா, ஜூனூன், மண்டி, சூரஜ் கா சத்வான் கோடா, மம்மோ மற்றும் சர்தாரி பேகம் ஆகியவை ஹிந்தி சினிமாவில் கிளாசிக் படங்களாகக் கருதப்படுகின்றன.

தி மேக்கிங் ஆஃப் தி மகாத்மா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: தி ஃபார்காட்டன் ஹீரோ முஜிப்: தி மேக்கிங் ஆஃப் எ நேஷன் ஆகிய வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

ஒருநாள் தொடா்: பாகிஸ்தான் வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான், ‘டக்வொா்த் லீவிஸ்’ (டிஎல்எஸ்) முறையில் 36 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை ... மேலும் பார்க்க

சூர்யா-44 தலைப்பு டீசர் அப்டேட்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா-44 படத்துக்கான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்எழுதி இயக்கும், சூர்யா 44 படத்தில் சூர்யா,ப... மேலும் பார்க்க

கேப்டன் இல்லாமல் செயல்படும் பிக் பாஸ் வீடு! முத்துக்குமரன் காரணமா?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 12வது வாரம் முழுக்க கேப்டன் இல்லாமல் செயல்படவுள்ளது. கடந்த வாரத்தில் கேப்டனை தேர்வு செய்வதற்கு நடைபெற்ற போட்டியில் ஜெஃப்ரியை வீழ்த்திய முத்துக்குமரன், பவித்ராவுக்கு விட... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: புதிய சாதனை படைத்த ஜாக்குலின்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஜாக்குலின் புதிய சாதனை படைத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதல் அனைத்து வாரங்களிலும் ஜாக்குலின் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார். ... மேலும் பார்க்க