செய்திகள் :

பிக் பாஸ் 8: புதிய சாதனை படைத்த ஜாக்குலின்!

post image

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஜாக்குலின் புதிய சாதனை படைத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதல் அனைத்து வாரங்களிலும் ஜாக்குலின் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார். அதிகப்படியான வாக்குகளைப் பெற்று ஒவ்வொரு முறையும் வெளியேறுவதிலிருந்து காக்கப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் வரலாற்றில் ஒரு போட்டியாளர் இத்தனை முறை தொடர்ந்து நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றதில்லை. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாக்குலின் புதிய சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் ஜாக்குலின்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக இருபோட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே 11வது வார இறுதியான நேற்று ரஞ்சித் மட்டுமே வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடந்து 12வது வாரத்தில் 12 போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர்.

இவர்களுக்கான நாமினேஷன் செய்யும் பணிகள் முதல் நாளில் நடைபெற்றது. இதில், அன்ஷிதா, விஜே விஷால், ஜாக்குலின், ஜெஃப்ரி, ராணவ், மஞ்சரி, பவித்ரா ஜனனி என 7 போட்டியாளர்கள் இந்த வாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜாக்குலின்

ஜாக்குலின் படைத்த சாதனை

நடிகை ஜாக்குலின் இந்த வாரமும் தொடர்ந்து நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 12 வாரங்களுக்கு அவர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இதுவரை எந்தவொரு போட்டியாளரும் 12 முறை இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் விளையாடத் தகுதியற்ற நபர்களின் பட்டியலில் இடம்பெற்றதில்லை. எனினும் ஒவ்வொரு முறையும் அவர் ரசிகர்களால் வாக்களித்து காக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றாலும் ரசிகர்களால் காக்கப்படும் நபராக ஜாக்குலின் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க |பிக் பாஸ் 8: 12வது வாரத்தில் வெளியேறக் காத்திருக்கும் போட்டியாளர்கள்!

கேப்டன் இல்லாமல் செயல்படும் பிக் பாஸ் வீடு! முத்துக்குமரன் காரணமா?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 12வது வாரம் முழுக்க கேப்டன் இல்லாமல் செயல்படவுள்ளது. கடந்த வாரத்தில் கேப்டனை தேர்வு செய்வதற்கு நடைபெற்ற போட்டியில் ஜெஃப்ரியை வீழ்த்திய முத்துக்குமரன், பவித்ராவுக்கு விட... மேலும் பார்க்க

அல்லு அர்ஜுன் விவகாரம்: இசையமைப்பாளர் தேவா கருத்து!

மதுரை: புஷ்பா 2 சிறப்பு திரையிடல் சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது பதியப்பட்ட வழக்கு குறித்து இசையமைப்பாளர் தேவா கருத்து தெரிவித்துள்ளார்.மதுரையில் இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி வருகின்ற ஜ... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: 12வது வாரத்தில் வெளியேறக் காத்திருக்கும் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 12வது வாரத்தில் வெளியேறக் காத்திருக்கும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள், இனி போட்டியில் தொடரத் தகுதியற்றவர்கள் ... மேலும் பார்க்க

இன்றுமுதல் ஒளிபரப்பாகிறது எதிர்நீச்சல் -2 தொடர்!

எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் இன்றுமுதல் ஒளிபரப்பாகவுள்ளது. இன்று இரவு 9.30 மணிக்கு இரண்டாம் பாகத்தின் முதல் எபிஸோட் ஒளிபரப்பாகிறது. எதிர்நீச்சல் முதல் பாகம் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென முடிவுக்கு... மேலும் பார்க்க