செய்திகள் :

சிறுபான்மையினருக்கு எதிரானது பாஜக: மு.க. ஸ்டாலின்

post image

சிறுபான்மையினருக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச. 23) குற்றம் சாட்டியுள்ளார்.

அதனால்தான் தேர்தலில் பாஜகவை சிறுபான்மை அரசாக்கியிருக்கிறார்கள் மக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

சமத்துவத்தைப் போற்றுவதுதான் திராவிட மாடல்; திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இதுவே பதில்.

எந்த மதமாக இருந்தாலும் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்க வேண்டும். இறைவனை வேண்டுவது அவரவர் விருப்பம்; எதிலும் பாகுபாடு காட்டக்கூடாது.

தமிழகத்தில் 37 தேவாலயங்களை புனரமைக்க ரூ.1.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் புனித பயணம் செல்வோருக்கு ரூ. 37,000 நிதி நேரடியாக வழங்கப்படுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நின்றது திமுக, ஆதரவு தெரிவித்தது அதிமுக. சிறுபான்மையினருக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

அதனால்தான் தேர்தலில் பாஜகவை சிறுபான்மை அரசாக்கியிருக்கிறார்கள் மக்கள். நலத்திட்டங்களை நிறைவேற்றுவதால்தான் மக்கள் நல அரசாக இது திகழ்கிறது.

நாள்தோறும் நலத்திட்டங்கள், திறப்பு விழாக்கள் என அரசு பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என முதல்வர் பேசினார்.

இதையும் படிக்க | அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்: அரசாணை

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சம்மன்!

திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாளை (டிச. 24) ஆஜராக வலியுறுத்தி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விச... மேலும் பார்க்க

8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி முறையே தொடரும்: அமைச்சர்

கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது என்றும், தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் எனவும் பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்: அரசாணை

அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும், அயல்நாட்டு ... மேலும் பார்க்க

தூத்துக்குடி, குமரி செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற டிச. 29, 30, 31 ஆகிய 3 நாள்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டிச. 29 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு முதலில் தூத்துக்... மேலும் பார்க்க

விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டம்: முதல்வருக்கு அழைப்பு

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன்... மேலும் பார்க்க

தேர்தல் விதிகளில் திருத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தேர்தல் விதிகள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் த... மேலும் பார்க்க