8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி முறையே தொடரும்: அமைச்சர்
கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது என்றும், தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறையை மத்திய கல்வித் துறை இன்று ரத்து செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.