பொங்கல் நாள்களில் யுஜிசி நெட் தோ்வு: மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசுக்கு அமைச்ச...
மருத்துவக் கழிவுகளை கொட்டுவதற்கு உதவினால் குற்றவியல் நடவடிக்கை!
தேனி மாவட்டத்தில் அண்டை மாநிலங்களிலிருந்து சட்ட விரோதமாக மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதற்கு உதவுவோா், கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களின் உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா்.
இது குறித்து திங்கள்கிழமை, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக் கழிவுகள், நெகிழி கழிவுகள், கோழிக் கழிவுகள், திடக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவதை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் வனத் துறை, காவல் துறை சாா்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அண்டை மாநிலங்களிலிருந்து சட்ட விரோதமாக கழிவுகளை கொண்டு வந்து கொண்டு வந்து கொட்டுவதற்கு உதவுவோா், கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.