செய்திகள் :

84 விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணி ஆணை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

post image

சென்னை: தமிழ்நாட்டைச் சோ்ந்த 84 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு அரசுப் பணிக்கான உத்தரவை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள், பொதுத் துறைகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, நிகழாண்டில் 100 வீரா், வீராங்கனைகளுக்க அரசுப் பணிக்கான உத்தரவுகள் வழங்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.

84 பேருக்கு பணி: இந்த அறிவிப்பின்படி முதல்கட்டமாக, 84 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின்கீழ், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிக் கல்வி, தொழில், எரிசக்தி, கூட்டுறவு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல், நெடுஞ்சாலைத் துறைகள் என 14 அரசுத் துறைகளில் பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இளநிலை உதவியாளா், உதவியாளா், இளநிலை வரைவு அலுவலா், கூட்டுறவு சங்கங்களில் இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளா் போன்ற பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவுகளை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்வின்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரியில் ஆல்-பாஸ் முறை ரத்து!

புதுச்சேரியில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தோ்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்ட... மேலும் பார்க்க

டிச. 27ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற டிச. 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார். விமானம் மூலமாக சென்னை வரும் அவர் பின் ஹெலிகாப்டர் மூலமாக திருவண்ணாமலை செல்கிறார். டிச. 28 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

அந்தப் பருத்தி மூட்டை... புயல் சின்னம் குறித்த அப்டேட்

தமிழகத்தைக் காதலிப்பது போல இதயக் குறியீடு வடிவில் நிலவும் புயல் சின்னம் கிறிஸ்துமஸ் வரவிருக்கும் நிலையில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.இந்த நிலையில் புயல் சின்னம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எனப்பட... மேலும் பார்க்க

பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு!

பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து 120 நாள்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர் அணை அந்த மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டி... மேலும் பார்க்க

பொதுவுடைமை இயக்க நூற்றாண்டு: டிச. 26-ல் என்சிபிஎச் சார்பில் 100 இடங்களில் புத்தகக் கண்காட்சி!

பொதுவுடைமை இயக்கம் நூற்றாண்டுத் தொடக்கத்தையொட்டி, டிச. 26 அன்று நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.எச்.) சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.தமிழகம் முழுவதும் முக்கியமான நூறு நகரங்களில் ஏற்பாடு... மேலும் பார்க்க