இந்தாண்டும் பிரியாணி முதலிடம்! அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்!
2024 ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள், எந்த பகுதியில் மக்கள் அதிகம் ஆர்டர் செய்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை பிரபல உணவு டெலிவரி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் ஸ்விக்கி நிறுவனம், தொடர்ந்து 9-வது ஆண்டாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தைப் பிடித்திருப்பதாகக் கூறியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 8.3 கோடி பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒவ்வொரு நொடிக்கும் 2 பிரியாணி வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டைவிட இது அதிகம்.
இதையும் படிக்க | டிச. 27ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா!
ஹைதராபாத்தில் 97 லட்சம், பெங்களூரு 77 லட்சம், சென்னையில் 46 லட்சம் ஆர்டர்கள் வந்துள்ளன.
அடுத்து தோசை 2.3 கோடி ஆர்டர்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் 125 பாஸ்தா உணவுகள் ஆர்டர் செய்து ரூ.49,900 செலவழித்துள்ளார்.
தென் இந்தியாவில் தோசை, இட்லி அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் 25 லட்சம் மசாலா தோசை ஆர்டர் ஆகியுள்ளது.
ஸ்நாக்ஸ் வகைகளில் சிக்கன் ரோல், சிக்கன் மோமோஸ், உருளைக்கிழங்கு வறுவல், நள்ளிரவில் ஆர்டர் செய்யும் உணவில் அதிகமாக நள்ளிரவு 12 முதல் அதிகாலை 2 மணி வரை சிக்கன் பர்கர்(18 லட்சம்) ஆர்டர் செய்துள்ளனர்.