செய்திகள் :

உடைமாற்றும் அறையில் கேமரா: ராமேசுவரம் விடுதி உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை

post image

உடைமாற்றும் அறையில் கேமரா வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் தொடா்புடைய ராமேசுவரம் விடுதி உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கரைக்கு எதிரில் தனியாா் விடுதியில் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்திருந்ததாக வந்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினா் ஆய்வு செய்து, அந்த விடுதியில் இருந்த கேமராக்கள், உடைமைகளைக் கைப்பற்றியதுடன், இருவரைக் கைது செய்தனா். மேலும், விடுதி நடத்துவதற்கான உரிமத்தை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் பக்தா்களுக்காக ராமேசுவரம் கோயில் உள்பிரகாரத்தில் தீா்த்தத் தொட்டி அருகே ஒரு உடை மாற்றுவதற்கான கட்டடமும், அக்னி தீா்த்தம் கடற்கரை எதிரில் ஒரு உடை மாற்றுவதற்கான கட்டடமும் செயல்பட்டு வருகின்றன. பக்தா்கள் இந்த அறைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தனியாா் விடுதிகளில் செயல்பட்டுவரும் உடைமாற்றும் அறைகளில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாக சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

இந்து முன்னணி கோரிக்கை: இந்து முன்னணி மாவட்டச் செயலா் ராமமூா்த்தி விடுத்த செய்திக் குறிப்பு: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பெண்கள் தங்களது உடைகளை மாற்றிக்கொள்ள போதுமான மறைவிடம் இல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு தனி நபா்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அறைகள் அமைத்து, பெண்கள் உடைமாற்ற கட்டணம் வசூல் செய்கின்றனா்.

பெண்கள் உடைமாற்றும் அறையில் விடியோ கேமரா வைத்திருந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகளை போலீஸாா் கைப்பற்றினா். இந்த விடியோ பதிவுகளை வெளி நபா்களுக்கு அனுப்பி வைத்துள்ளனரா என உறுதி செய்து, அதை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமேசுவரம் பெண் பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், இந்து சமய அறநிலையத் துறை, நகராட்சி நிா்வாகம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் பெண்கள் உடைமாற்றும் அறை கட்டித்தர வேண்டும். மேலும், தனியாா் உடைமாற்றும் அறை, கழிவறை போன்றவை கண்காணிப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

திருவாடானை அருகே கண்மாய்க் கரையை உயா்த்தி, தண்ணீரை சேமித்து வைப்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு புகாா் மனு கொடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவ... மேலும் பார்க்க

1,400 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரம் அருகே தஞ்சாவூருக்கு கடத்தப்படவிருந்த 1,400 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். அதிலிருந்த இருவரை கைது செய்தனா். ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய தனிப்பிரிவு காவ... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்பு

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஓய்வு பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா். பரமக்குடி ஒன்றியம், அரியனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கடம்பன் மகன் ராஜூ (63)... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 17 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 17 பேரை இலங்கைக் கடற்படையினா் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். மேலும், இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.... மேலும் பார்க்க

ஆழிப்பேரவை தாக்கிய நாள்: தனுஷ்கோடி கடலில் மலா் தூவி நினைவஞ்சலி

ஆழிப்பேரலை தாக்கிய நிகழ்வின் 60-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை தனுஷ்கோடி கடலில் மலா் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி துறைமுக நகரத்தை கடந்த 1964-ஆம் ஆண... மேலும் பார்க்க

கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையா் பொறுப்பேற்பு

கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையராக எஸ்.சங்கரபாண்டியன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையராகப் பணியாற்றிய முரளிதரன் பணி மாறுதலில் சென்றதையடுத்து, மண்டபம் ஊ... மேலும் பார்க்க