செய்திகள் :

ஜோ ரூட் முதலிடம்: ஆஸி வீரர்கள் முன்னேற்றம், இந்திய வீரர்கள் சரிவு!

post image

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஜோ ரூட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.

4ஆவது போட்டி நாளை (டிச.26) மெல்போர்னில் நடைபெறுகிறது. இந்தியா சார்பாக விளையாடும் ஜெய்ஸ்வால் 4இல் இருந்து 5ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மற்றுமொரு இந்திய வீரர் ரிஷப் பந்த் 9இல் இருந்து 11ஆவது இடத்துக்கு சரிந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் கடந்த டெஸ்ட்டில் முதல்முறையாக டாப் 10இல் இருந்து கீழிறங்கினார். பின்னர் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் சதம் அடித்து மீண்டும் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.

டிராவிஸ் ஹெட் ஓரிடம் முன்னேறி 4ஆவது இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், ஹாரி புரூக் முறையே முதலிரண்டு இடங்களை தக்கவைத்துள்ளார்கள்.

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியல்

1. ஜோ ரூட் - 895

2. ஹாரி புரூக் - 876

3. கேன் வில்லியம்சன் - 867

4. டிராவிஸ் ஹெட் - 825 (ஓரிடம் ஏற்றம்)

5. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 805 (ஓரிடம் சரிவு)

10. ஸ்டீவ் ஸ்மித் - 721 (ஓரிடம் ஏற்றம்)

11. ரிஷப் பந்த் - 708 ( இரண்டிடம் சரிவு)

டபிள்யூடிசி இறுதிப் போட்டிக்கான திட்டமிடலில் தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா இடம்பெறுமென கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்தாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தகுதிபெற... மேலும் பார்க்க

கொன்ஸ்டாஸ் வார்னரின் ‘குளோன்’ இல்லை: கிரேக் சேப்பல்

இளம் ஆஸி. வீரர் சாம் கொன்ஸ்டாஸ் முன்னாள் ஆஸி. டேவிட் வார்னரின் குளேன் இல்லை என கிரேக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் 19 வயதாகும் சாம் கொன்ஸ்டாஸ் மெல்போர்... மேலும் பார்க்க

தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பும்ரா..!

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு முன்பாக உத்வேகம் கிடைக்... மேலும் பார்க்க

கேள்விக்குள்ளாகும் பும்ராவின் பந்துவீச்சு..! நீக்கப்படுவரா?

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சு குறித்து ஆஸி.யின் அனுபவம் வாய்ந்த வர்ணனையாளர் ஐயான் மௌரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். முதல் டெஸ்ட்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்த... மேலும் பார்க்க

பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு!

பார்டர் கவாஸ்கர் தொடரின் 4ஆவது போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் ஃபிளேயிங் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 4ஆவது போட்டி மெல்போர்னில் நடக்கவிருக்... மேலும் பார்க்க

பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கும் பும்ரா, ஜடேஜா!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை படைக்க இந்திய பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ஜடேஜா காத்திருக்கிறார்கள்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொ... மேலும் பார்க்க