அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு: அதிகாரபூா்வமாக உறுதி செய்த பைடன்
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பார்டர் கவாஸ்கர் தொடரின் 4ஆவது போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் ஃபிளேயிங் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 4ஆவது போட்டி மெல்போர்னில் நடக்கவிருக்கிறது.
இதில் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் காயத்திலுருந்து குணமடைந்துவிட்டதால் அவர் விளையாடுவரென உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இளம் அதிரடி வீரர் சாம் கொன்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹேசில்வுட் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக ஸ்காட் போலாண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி
உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ். மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (வி.கீ) , பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலாண்ட்.
”டிராவிஸ் ஹெட் ஃபீல்டிங்கின்போது சிறிது சிறமப்பட்டார். ஆனால், அதை சமாளித்துக்கொள்ளலாம். அனைத்து பாக்ஸ்களையும் டிக் செய்துள்ள டிராவி ஹெட் பாக்ஸிங் டே டெஸ்டில் விளையாடுவார்” என கம்மின்ஸ் கூறியுள்ளார்.