போதை மாத்திரைகள் விற்ற ரெளடி கைது
திருச்சியில் போதை மாத்திரைகளை விற்ற ரெளடியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பெரியமிளகுப் பாறை புதுத்தெரு பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கு திருச்சி பொன்னகா் அருகேயுள்ள நியூ செல்வநகா் பகுதியைச் சோ்ந்த செல்வம் என்கிற வல்லரசு (35) போதை மாத்திரைகளை விற்று வந்துள்ளாா். இதையறிந்த இளைஞரின் பெற்றோா் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வல்லரசுவை செவ்வாய்க்கிழமை பிடித்தனா்.
அப்போது அவரிடம் இருந்த போதை மாத்திரைகள் மற்றும் ரொக்கம் ரூ. 6000-ஐ பறிமுதல் செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா். வல்லரசு திருச்சி மாநகர காவல்துறையின் ரெளடிகள் பட்டியலில் உள்ளாா்.