4 உயா்நீதிமன்றங்களுக்கு 6 நீதிபதிகள் நியமனம்: கொலீஜியம் பரிந்துரை
சுனாமி நினைவு நாள்: வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை!
சுனாமி 20 ஆம் ஆண்டு நினைவு தினம் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கடலோர கிராமங்களில் இன்று(டிச.26) அனுசரிக்கப்பட்டது.
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மீனவர்கள் உள்ளிட்ட 6065 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் சி.இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி இன்று காலை நடைபெற்றது.
இதுபோல் வேளாங்கண்ணியில் சுனாமியால் உயிரிழந்த ஆயிரத்திற்கும் அதிகமானோரை ஒரே இடத்தில் அடக்கம் செய்த வேளாங்கண்ணி ஆர்ச்சில் உள்ள சுனாமி ஸ்தூபில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமானவர்கள் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி கடற்கரையிலிருந்து அமைதிப் அமைதிப் பேரணியாக அஞ்சலி செலுத்தினர்.
பேராலய பங்குத்தந்தை எஸ்.அற்புதராஜ் புனித நீர் தெளிக்க பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்தனர்.
சுனாமி ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்து போனாலும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து இருந்து வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபியில் கதறி கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தியும் மாலைகளை வைத்து அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் வேளாங்கண்ணி பேரூராட்சி, துணைத்தலைவர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன், பேராலய பொருளாளர் டி.உலகநாதன், உதவி பங்குதந்தைகள் லூர்துசேவியர், பி.ஆரோக்கிய பரிசுத்தராஜ், எஸ்.மார்டின்சூசைராஜ், எஸ்.பிரான்கோஎடின், அருட்தந்தையர்கள் மற்றும் திருத்தல பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வேளாங்கண்ணி ரோட்டரி சங்கத்தின் சார்பில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, அஞ்சலி செலுத்த வந்தோருக்காக தேநீர் பிஸ்கட் வழங்கும் நிகழ்வு சங்கத் தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாசன தலைவர் ஆபிரகாம், முன்னாள் தலைவர்கள், எஸ்.பி. சுப்பிரமணியம், தக்ஷிணாமூர்த்தி, குணசேகரன், கோபாலகிருஷ்ணன், சங்க செயலாளர் சபரி தேவன், சங்க பொருளாளர் பரத்வாஜ், இன்னர்வில் சங்கத் தலைவி ரூபி குமார், செயலாளர் ராதா சந்துரு, பொருளாளர் ஜேம்ஸ் ரேக்ஸ் வினிட்டா, முன்னாள் தலைவி சாகிதா ப்ரின்ஸ், உறுப்பினர் நந்தினி சோழராஜன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.